நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் தான் நடக்கிறதோ.. திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் விளாசிய நீதிபதி
சென்னை: திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு, சிவகங்கை தனியார் காவலாளி காவல் துறை கஸ்டடி மரணம் என்று காவல் துறையின் செயல்பாடுகள் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதிலும் ஏடிஜிபி முதல் காவல்துறையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட பெண் வரை திருவள்ளூர் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதோ என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 23). இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஶ்ரீ (வயது 21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனுஷ் - விஜயஶ்ரீ திருமணம் செய்துள்ளனர். இது விஜயஶ்ரீயின் குடும்பத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
விஜயஶ்ரீயின் தந்தை வனராஜ் (வயது 55) அவர்களை பிரிக்க திட்டமிட்டார். இதற்காக தேனியில் உள்ள மகேஸ்வரி என்கிற முன்னாள் காவலரை (காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்) அணுகியுள்ளார். வனராஜ், மகேஸ்வரி திட்டமிட்டு தனுஷின் 17 வயது சகோதரரை கடத்தினார்கள். இதுதொடர்பாக வனராஜா, மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை கடந்த ஜூன் மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
மகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் சிக்கினார்கள். கடத்தலுக்கு ஏடிஜிபியின் வாகனத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பூவை ஜெகன்நாதனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட வனராஜா, மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேர்களில் வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகிய 3 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மறுபக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது காவல்துறை சார்பில், இன்னும் வழக்கில் முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை கடுமையாக பாதிக்கப்படும். அதனால் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையின் வாதத்தை ஏற்று நீதிபதி அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதேநேரத்தில் வழக்கு விசாரணை வேகமாக இல்லை என்பது குறித்த அதிருப்தியையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவு நகலில், "வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பார்த்ததில், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெரிகிறது.
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இந்த வழக்கு ஒரு முக்கிய உதாரணம். இதைப் பார்க்கும்போது சாதாரண மக்களின் வாழ்க்கை, சுதந்திரம் பற்றிய கவலை அதிகரிக்கிறது. இந்த நிகழ்வு நாடு போலீஸ் ராஜ்யத்துக்கு சென்றுவிட்டதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறை உயரதிகாரியும், சட்டமன்ற உறுப்பினரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அரசியல் பின்னணி, அதிகார பின்னணியை கடந்து காவல்துறை தங்கள் அறிக்கையில் கூறியுள்ளபடி, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் மீட்க முடியும்." என்று நீதிபதி கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications