Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூரில் மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. கேஷுவலாக சுற்றி வந்த கணவன்.. சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இரண்டு மாதமாக சகஜமாக வாழ்ந்து வந்த சிலம்பரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி மீது நடத்தையில் சந்தேகம் கொண்ட அவர் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். ஒரு நாள் ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த அவர், யாருக்கும் தெரியாமல் உடலை புதைத்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி பிரியா (வயது 26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் மகன்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே சமீப நாட்களாக அவ்வப்போது பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் உண்டானது.

thiruvallur-horror-woman-missing-for-months-found-buried-by-husband

வீட்டுக்கே வந்த மாமனார்

இதனால் அடிக்கடி கணவன் - மனைவி இடையே சமீப நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி கணவர் தன்னிடம் சண்டையிட்டு வந்ததால் கோபித்துக்கொண்டு பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார். பின்னர் சமாதானம் அடைந்ததும் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே உள்ள புதுப்பாளையத்தில் அவரது பெற்றோர் வீடு உள்ளது.

இந்த நிலையில், பிரியாவை அவரது பெற்றோரால் கடந்த இரு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் தந்தை சீனிவாசன் மகளை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் பிரியா இல்லை. மருமகன் சிலம்பரசனிடம் கேட்டபோது, பிரியா வெளியில் சென்று விட்டதாக கூறியிருக்கிறார்.

கொன்று டிரம்மில் அடைத்து

இதற்கிடையே பேரன்கள் இருவரும் அம்மாவை இரண்டு மாதங்களாக காணவில்லை தாத்தா என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் இது பற்றி உடனடியாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வீட்டுக்கு வந்து சிலம்பரசனிடம் விசாரணை செய்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது சிலம்பரசன் தான் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:- கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு மனைவி பிரியாவுடன் சிலம்பரசனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் கழுத்தை நெரித்ததில் உயிரிழந்துவிட்டார். இதனால் உடலை யாருக்கும் தெரியாமல் டிரம்மில் அடைத்து வைத்து, மோட்டார் சைக்கிளில் வெளியே கொண்டு சென்று 3 கிமீ தூரம் உள்ள ஏழு கண் பாலத்தை ஒட்டிய சுடுகாட்டின் அருகே புதைத்தது தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

இதையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். எனினும் சிலம்பரசன் மட்டுமே இதை செய்தாரா இல்லை வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியா உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் ஆரம்பாக்கம் போலீசார் உடலை தோண்டி எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+