கடைசி நொடியிலும் துடித்த திருவள்ளூர் மணப்பெண் லோகேஸ்வரி.. சோபாவில் உட்காராதே.. 1 பவுன் நகை எங்கே?
சென்னை: திருப்பூர் பெண் தற்கொலையில் இருந்து, இன்னும் யாருமே மீள முடியாத நிலையில், மற்றொரு கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது.. ஒரே ஒரு பவுன் நகைக்காக, திருமணமான தினத்திலேயே வரதட்சணை டார்ச்சர் ஆரம்பமாகியிருக்கிறது. அடுத்த 4வது நாள் லோகேஸ்வரி என்ற மணப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மாமியாரும் கைதாகி உள்ளார்.. ஆனால் நாத்தனாரை காணவில்லை.. அவரை போலீசார் தேடி வருகிறார்களாம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி. 22 வயதான லோகேஸ்வரி பிஏ பட்டதாரி ஆவார்.. இவருக்கும், அதே பொன்னேரியை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது.. பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பன்னீர் வேலை பார்த்து வருகிறார்.

திருமணம் முடிந்ததும் மறுவீட்டிற்காக லோகேஸ்வரி கணவருடன், தன்னுடைய அம்மா வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார்.. எனவே அன்று இரவு புதுத்தம்பதிக்கு விருந்து பரிமாறப்பட்டது.
பிறகு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.. அப்போது லோகேஸ்வரி பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.. ஆனால் நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரி வெளியே வராமல் இருந்ததை அவரது அப்பா கஜேந்திரன் கவனித்துவிட்டு, கதவை தட்டி பார்த்துள்ளார்.
கழிவறையில் லோகேஸ்வரி
ஆனால் பாத்ரூம் உள்ளேயிருந்து எந்த பதிலையும் லோகேஸ்வரி தரவில்லை. இதனால், பதறிப்போன அப்பா, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.. அப்போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்தார்.. கஜேந்திரனின் சத்தத்தை கேட்டு தூங்க சென்றவர்கள் அனைவருமே பதறியடித்து வந்தனர்...
உடனடியாக லோகேஸ்வரியை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் லோகேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்..
இதுகுறித்து லோகேஸ்வரியின் அப்பா கஜேந்திரன் பொன்னேரி போலீசில் புகார் தந்தார்.. அதில், 'எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம். திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர்.
ஏசி கட்டாயம் வேண்டும்
மேலும் மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி. வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். நேற்றிரவும் இதுகுறித்து எனது மகளிடம், பன்னீர் கேட்டு சண்டையிட்டார். இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. திருமணமாகி 4 நாளில் மணப்பெண் வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
1 சவரன் நகைக்காக
அதாவது 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம். திருமண சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும், நீ 4 சவரன் மட்டுமே கொண்டு வந்துள்ளதாகவும் திருமணமான முதல் நாளே லோகேஸ்வரியை குத்திக் காட்டினார்களாம்..
நாத்தனார் மாயம்
அத்துடன் மீதமுள்ள ஒரு சவரன் நகையை வாங்கி வருமாறு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்த துவங்கிவிட்டார்களாம்.. வீட்டு வேலைகளை செய்யுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.. காலையிலேயே எழுந்ததும் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும், சோபாவில் உட்கார கூடாது என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டார்களாம்.
இதையெல்லாம் மறுவீட்டுக்கு வந்தபோது, தன்னுடைய அம்மா, தங்கையிடம் சொல்லி அழுதுள்ளார் லோகேஸ்வரி.. தற்போது இப்போது இந்த விவகாரத்தில் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.. ஆனால், நாத்தனாரை காணவில்லையாம்.. அவரையும் தேடி வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications