திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது.. புழல் சிறைக்கு போக காரணமான கார்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் கடந்த மாதம் பைக்கில் ஊத்துக்கோட்டையை தாண்டி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயம் அடைந்தார். இதையடுத்து அஜித்குமாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் விபத்துக்குள்ளான காரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் டேட்டா ஆபரேட்டர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த 40 வயதாகும் சண்முகராஜ் என்பவர் கடந்த மாதம் 14-ந்தேதி இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் பகுதிக்கு போய்க் கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவர்தனது காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் சண்முகராஜ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சண்முகராஜ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். காரை விடுவித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஆய்வுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அஜித்குமாரிடம் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் (53) கேட்டாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜித்குமார் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசனிடம் நேரில் சென்று புகார் அளித்தார். அவரது ஆலோசனைபடி அஜித்குமார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்துடன் நேற்று ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீஸ் நிலையத்தில் டேட்டா ஆபரேட்டராக வேலை செய்யும் சுகுமார் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை அஜித்குமார் கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார்கள். பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வட்டி விகிதத்தை 2வது முறையாக குறைத்த அமெரிக்கா.. மீண்டும் அதிரடியாக உயரப்போகும் தங்கம் விலை
முன்னதாக கடந்த வாரம் நாகர்கோவிலில் இன்ஸ்பெக்டர் ஒருவர் இதேபோல் வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்படடார். நாகா்கோவில் நேசமணி நகா் போலீஸ் இன்ஸ்பெக்டராக 58 வயதாகும் அன்பு பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்ராக பணியாற்றி உள்ளார். லஞ்சம் வாங்கிய புகாரில் கடந்த அக்டோபர் 24ம் தேதி கைதானார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் இந்து தமிழர் கட்சி நிர்வாகி ஆவார். இவர் மீது நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஒரு அடிதடி புகார் வந்தது. இந்த வழக்கில் சந்தை ராஜனின் பெயரை சேர்க்காமல் விடுவிக்க ரூ.3 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், ராஜனிடம் கூறினாராம். இதையடுத்து ராஜனும் ரூ.1.85 லட்சத்தை அன்பு பிரகாஷிடம் கொடுத்தாராம்.
பின்னர் மீதமுள்ள லஞ்ச பணத்தையும் கேட்டு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் அவரை மிரட்டியதாக புகார் எழுந்தது. ஆனால் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார். பிறகு போலீசாரின் அறிவுரைபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1.15 லட்சத்தை நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் வைத்து அவரிடம் ராஜன் கொடுத்தாராம். லஞ்ச பணத்தை இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பிடித்தனர். இதையடுத்து போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசை கைது செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications