அதிமுக குழு கூட்டம் திடீரென ஒத்திவைப்பு.. திருவாரூர் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது!

அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது.

திருவாரூர் இடைதேர்தல்தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். இந்த தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும், அமமுகவும் இன்று அறிவிக்க உள்ளது. இன்று மாலை இரண்டு கட்சிகளும் அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கடந்த 3ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.

அதிமுக இன்று

அதிமுக இன்று

இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு, மாலை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது.

ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் இராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் தீவிரமாக நடந்து வந்தது. ஆனால் அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

நாளைத்தான்

நாளைத்தான்

இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கூட்டம் இன்று நடக்காது என்று கூறப்பட்டுள்ளது. நாளை மாலை 5.30 மணிக்குத்தான் கூட்டம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு நாளைக்கு தள்ளிப்போகிறது.

திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று திமுக, அமமுக தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ள நிலையில் அதிமுக மட்டும் பின்வாங்கியுள்ளது. அதிமுகவின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு என்ன காரணம், ஏன் கூட்டம் தள்ளிப்போனது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+