திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை!
சென்னை: டிட்வா புயல் மற்றும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன். அதேபோல, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்ககடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் அருந்தும் குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பின்னர் பருகவும், சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வீட்டில் மின் விளக்குகளை கவனமுடன் கையாளவும், உடைந்த மின்சாதன பொருட்களை உடனே மாற்றவும், வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகள், மின் பகிர்வுபெட்டிகள் அருகே செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
இடி மின்னல் ஏற்படும்போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தவேண்டாம் எனவும் பச்சை மரங்களுக்கு அருகில் நிற்கவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நீர் நிலைகளின் அருகில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை அவசரகால உதவி எண் 1077, 04366-226623 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9043989192 மற்றும் 9345640279 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications