"சனாதனம்".. ரிஷிகளாலும், ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது இந்த பாரதம்: ஆளுநர் ரவி பேச்சு
சென்னை இசை விழாவில் ஆளுநர் ஆற்றிய உரை பல்வேறு தரப்பினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது
சென்னை: இந்திய கலாசாரமானது, ஆன்மீகம் மற்றும் சனாதனத்துடன் வேரூன்றியுள்ளது... இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை வேறு எந்த ஆளுநர்களும் ஏற்படுத்தாத பரபரப்புகளை, தற்போதைய ஆளுநர், ஏற்படுத்தி வருகிறார்.. ஆளுநராக தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே, பல்வேறு கருத்துக்களாலும், பேச்சுக்களாலும் சர்ச்சைகளையும், ஏற்படுத்தி வருகிறார்.
ஊட்டி கவர்னர் மாளிகை சுற்றுசுவருக்கு கலர் மாற்றி பெயிண்ட் அடித்தது, தமிழகத்தில் ராமராஜ்ஜியம், என்பன உட்பட பல்வேறு முரண்பாடுகளுக்கு ஆளானபோதிலும், நீட் விவகாரம் உச்சக்கட்ட அதிருப்தியை தந்துவிட்டது. ஒருகட்டத்தில் ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும், திரும்ப அழைத்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் சென்றுவிட்டன..

கலாச்சாரம்
ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது, என்று திருமாவளவன் ஓபனாகவே சொல்லிவிட்டார்.. தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதல் முதலில் குரல் எழுப்பியதும் விசிகதான்... இப்படி பல்வேறு விஷயங்களில் பரபரப்பை கிளப்பி கொண்டுவருகிறார் ஆளுநர் ரவி.. இந்நிலையில், சென்னையில் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சங்கீதத் திருவிழாவை ஆளுநர் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.. அப்போது நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:

துரதிஷ்டம்
நம் நாடு இப்போது ஒரு குடும்பமாக பார்க்கப்படுகிறது... இதற்கு முன்பும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, இந்தியா ஒரு குடும்பமாக பார்க்கப்பட்டது. நம் நாட்டின் மரபுகள், கலாச்சாரம் ஆகியவை, அதன் அடையாளத்தை வரையறுக்கின்றன.. தமிழகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இலக்கிய வளம் நிறைந்ததாக இருந்தது.வேதங்கள், உபநிடதங்கள், திருக்குறள், திவ்யபிரபந்தங்கள் என ஏராளமான இலக்கியங்கள், இளைய தலைமுறையினர் எடுத்துச் செல்லக்கூடிய மரபாக உள்ளன. பன்முக கலாச்சாரம், சாதி, மதம், மொழி, உணவு வகைகள் போன்றவை இந்தியாவின் அழகும் வலிமையும் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக அது பலவீனமாக மாறியது.

விதைப்பு
இன்று பலர் பாரதத்தை பற்றி பேசுவது கிடையாது. பாரத் என்பதை உடைப்பதற்கு, அழிப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றது.
ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தனர்.ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலர் இன்றளவும் காலனி ஆதிக்க மனப்பான்மை கொண்டு, தாழ்வு மனநிலையிலேயே இருக்கின்றனர். அவர்களுள் பலர், ஆங்கிலேயர்கள் ஆட்சியை கெடுதலிலும் நன்மை என்று நினைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் இங்குள்ள மக்கள் மத்தியில் விதைத்துச் சென்ற எண்ணங்கள், இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் இருக்கும் என்று காந்தி ஒருமுறை சொன்னார்..

பரிதாபம்
ஆங்கிலேயர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில், இந்தியாவிலும் தமிழகத்திலும் பலர் கல்வி கற்றிருக்க முடியாது என்று ஒருவர் பேசியதை செய்தித்தாளில் படித்தேன். இவ்வாறு பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தமிழகத்தில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரம்மிக்க வைக்கிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் பாரதம் உருவாக்கப்பட்டது.

மறுமலர்ச்சி
'செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள், வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் நிறைந்த தமிழ்நாடு' என்று அன்றே மகாகவி பாரதியார் குறிப்பிட்டார். ஒரே பாரதம் தான். அதில் நாம் எல்லோரும் அங்கம். ஒரே பாரதம் என்பதை பலர் சிதைக்க முயற்சிக்கின்றனர்.. காலனி ஆதிக்கத்துக்குப் பிறகுதான், மக்களின் மனம் மேற்கத்திய கலாசாரத்துக்கு ஆட்பட்டுள்ளது.. அன்னிய படையெடுப்பாளர்களால் நமது கலாச்சாரம் மேலும் சேதம் அடைந்தது. இந்தியாவில் இப்போது எல்லா துறைகளும் மறுமலர்ச்சி அடைந்து வருகின்றன...

மாறிய பார்வை
இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வை மாறியும் உள்ளது.. இந்திய கலாசாரமானது, ஆன்மீகம் மற்றும் சனாதனத்துடன் வேரூன்றியுள்ளது... மக்கள் ஆன்மீகம் மற்றும் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர்.. நம்முடைய கலை, கலாசாரம் போன்றவை, படையெடுப்பாளர்களால் மேலும் சேதமடையாமல் காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.. அவற்றை காக்கும் பணியில், பாரதிய வித்யா பவன், கலாஷேத்ரா போன்ற ஏராளமான தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன" என்று பேசினார் ஆளுநர் ரவி.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications