யாருக்கும் கிடைக்காத டேட்டா.. நிர்மலா சீதாராமனிடம் வாங்கிய பிடிஆர்! அசத்தல் திட்டம் அமலான பின்னணி
சென்னை: அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுவோர், கார் வைத்துள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு மகளிர் உரிமை தொகையை வரைமுறைப்படுத்தியது எப்படி என்பது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
ஐடி துறையின் அமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் முன்பு நிதித்துறை அமைச்சராக இருந்தார். அவர் நிதித்துறை அமைச்சராக இருந்த போது தான், தகுதியான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் எப்படி தருவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தகுதியான மகளிர் என்ற வார்த்தை சாதாரணமானது அல்ல. ஏனெனில் ஏழைகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது, அதேநேரம் சிக்கனமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசால் வழங்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் முதல் இரு வருடங்களில் நிதிநிலை நெருக்கடியால் அந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை.. ஆனால் 3வது ஆண்டில் அந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்தது.

அதன்படியே செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வருமான வரி கட்டுவோர், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், அதிக சம்பளம் வாங்குவோர் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. இதை எப்படி சரியாக அடையாளம் கண்டு அரசு திட்டத்தை நிறைவேற்றியது என்பதை உண்மையில் மலைப்பான விஷயம் ஆகும்.
ஏனெனில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், வருமான வரி கட்டுவோர், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், அதிக சம்பளம் வாங்குவோர் ஆகிய விவரங்கள் மத்திய அரசிடம் தான் உள்ளது. குறிப்பாக யார் யார் வருமான வரி கட்டுகிறார்கள், கார் வைத்துள்ளவர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள், நிறைய சம்பளம் வாங்குவோர் விவரங்கள் மத்திய நிதியமைச்சகத்திடம் தான் இருக்கிறது.
இந்த விவரங்களை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜன் பெற்று அதன்படி தான் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த விவரங்கள் சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே வருமான வரி கட்டுவோர் விவரங்கள், கார் வைத்துள்ளவர்கள் விவரங்களை எளிதாக தமிழக அரசால் எளிதாக அடையாளம் காண முடிந்திருக்கிறது. அதன்படியே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவும் இல்லை..
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், கார் வைத்துள்ளவர்கள் விவரங்களை மத்திய அரசிடம் இருந்து வாங்கிய முதல் மாநிலம் தமிழகம் தான். இதுபற்றி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் இரண்டு முக்கிய பங்கு உள்ளது. இதுவரைக்கும் இந்தியாவில் யாருக்கும் கிடைக்காத தகவல், ஐடி ((இன்கம் டேக்ஸ்) துறையில் இருந்து கொடுக்கிறதுக்கு ஒப்பந்தம் போட்டு வாங்கியவன் நான்.. யாரெல்லாம் வருமான வரி கட்டுகிறார்கள், யாரெல்லாம் எவ்வளவு வருமான வரி கட்டுகிறார்கள் என்ற தகவலை கொடுக்காத மத்திய அரசாங்கம், தமிழகத்திற்கு கொடுத்தது. இதுபற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் திரும்ப திரும்ப பேசி, நிதியமைச்சரை, நிதித்துறை செயலாளரை, வருமான வரித்துறை செயலாளர் உள்ளிட்டோரை பல முறை சந்தித்து இதன் முக்கியத்துவத்தையும்,பலனையும் விளக்கி கோரிக்கை வைத்து பேசினோம். அதன்படியே ஒப்பந்தம் வாங்கி , வேற எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அந்த தகவலை வாங்கி கொடுத்தது நான் நிதியமைச்சராக இருந்த போது தான்.
வருமான வரி விவரங்களை வாங்கிய பின்னர் தான் யார் பணக்காரர்கள், யார் ஏழை என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதுவரை மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த தகவலை எங்குமே கொடுத்து இல்லை.. அதேநேரம் கார் வைத்துள்ளவர்கள் யார், பணக்கார்கள் யார் என்பது குறித்து தெலுங்கானாவில் மிகச்சரியான கணிணி மாடல் திட்டம் இருந்தது. அந்த திட்டத்தை வாங்கி செயல்படுத்தி பார்த்த பின்னர் தான் வருமான வரி கட்டுவோர், கார் வைத்துள்ளவர்கள், மின்சாரம் 2000 யூனிட்டுக்கு மேல் கட்டியவர்கள் குறித்து தகவல்களை அறிய முடிந்தது " இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications