Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.9000 கோடி கார் டிரைவர் அக்கவுண்ட்டில் மாறியது இப்படித்தான்!.. விளக்கம் அளித்த வங்கி அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.9000 கோடி கார் டிரைவரின் வங்கிக்கணக்கில் மாறியது எப்படி என்று தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வங்கி கணக்கு எண் பதிவிட வேண்டிய இடத்தில் பணத்தையும் பணம் பதிவிட வேண்டிய இடத்தில் வங்கி கணக்கு எண்ணையும் பதிவிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எழுத்தரின் பிழை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். ஆனார் கார் டிரைவர் ராஜ்குமாருக்கு வங்கிக்கணக்கில் வந்து விழுந்தது பல ஆயிரம் கோடி. அந்த செய்திதான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. என்ன நடந்தது எப்படி பணம் மாறியது என்று விபரமாக பார்க்கலாம்.

This is how Rs.9000 crore deposited in the drivers account says TMB officials

பழனியை சேர்ந்த ராஜ்குமார் வேலை தேடி சென்னைக்கு வந்து நண்பன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ரூ.9000 கோடி கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளது என வந்துள்ளது.

அக்கவுண்டில் வந்திருப்பது 9,000 கோடி எப்படி வந்திருக்கும் என்று யோசித்தார் ராஜ்குமார். நம்முடைய அக்கவுண்ட்டில் ரூ.115தானே இருக்கும்
யாரோ நம்மை ஏமாற்ற இப்படி மெசேஜ் அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தார். இது ஒரு மோசடி மெசேஜ் என்று நினைத்த ராஜ்குமார், அதன்பின் போன் ஆப்பில் செக் செய்தபோது அக்கவுண்டில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது உண்மை தானா என சோதிக்க தனது நண்பன் வங்கி கணக்குக்கு ரூ. 21,000 அனுப்பியுள்ளார். இந்த பணப்பரிவர்த்தனை நடந்த சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமையை அலுவலத்தில் இருந்து ராஜ்குமாருக்கு போன் செய்துள்ளனர். தவறுதலாக ரூ.9000 கோடியை உங்க அக்கவுண்டில் டெபாசிட் செய்துவிட்டோம். நீங்க ஷேர் செய்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு அவரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர்.

இதனால் தலை சுற்றிப்போன ராஜ்குமார், இவ்வளவு பெரிய தொகை என் அக்கவுண்டுக்கு வந்துள்ளது. இதனால் எனக்கு பிரச்னை எதாவது வந்துவிடும் நான் எதற்கும் காவல்நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார். இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

This is how Rs.9000 crore deposited in the drivers account says TMB officials

இதனையடுத்து ரூ.9000 கோடி பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரே நாளில் ஊடகங்களில் அதிகமாக ராஜ்குமார் பற்றிதான் பேசினர்.

இது எழுத்தரின் பிழை ( Clerical mistake) என வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண் பதிவிட வேண்டிய இடத்தில் பணத்தையும் பணம் பதிவிட வேண்டிய இடத்தில் வங்கி கணக்கு எண்ணையும் பதிவிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எழுத்தரின் பிழை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் வங்கிக்கு இழப்பு ஏதும் இல்லை எனவும் கிளரிக்கல் தவறு என்பதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றதாகவும் வரவு வைக்கப்பட்டு 30 நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கிற்கு திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கி தவறுதலாக பணத்தை போட்டு விட்டு உடனே திரும்ப பெற்று விட்டது. அதே வாடிக்கையாளர்கள் தவறுதலாக வேறு யாருடைய கணக்கிலாவது பணத்தை டெபாசிட் செய்து விட்டால் அதை திரும்ப பெறுவதற்கு மாதக்கணக்கில் கூட அலைய வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+