அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்
சென்னை: ''அதிமுகவை சேர்ந்த ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. சட்டசபையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்லு'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தவெகவின் இந்த செயலுக்கு மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அந்த கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது'' என்று கூறியுள்ளார்.முன்னதாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைத்த அதிமுக தலைவர்களுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த தேர்தல் தோல்வி என்பது அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியது. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதிமுகவில் 2 அணி உருவானது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 22 எம்எல்ஏக்களும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்எல்ஏக்களும் இருந்தனர். இதில் சிவி சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறினர்.
அதுமட்டுமின்றி முதல்வர் விஜய் நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் சிவி
சண்முகம் -எஸ்பி வேலுமணி அணியை சேர்ந்தவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியும் அவர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் நேற்று அதிமுகவில் சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் இருந்தவர்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமர், தாராபுரம் எம்எல் சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்.
அதன்பிறகு இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் 4 பேரும் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்!












Click it and Unblock the Notifications