இது சாதாரண நடைபாதை அல்ல.. ராஜபாதை.. கிளாம்பாக்கம் மேலே நடக்கும் அதிசயம்.. துள்ளி வந்த அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தை பேருந்து நிலையத்தோடு இணைக்கும் நடைபாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைபாலம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இதன் பணிகள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது.

kilaampakkam bus

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பாலம்: மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.


பாலம் எப்படி இருக்கும்?: இந்த பாலம் சாதாரண நடைபாலமாக இருக்காது. மாறாக இது ராஜபாதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது

இந்த பாலத்தில் சிறிய சிறிய கியாஸ்க் வகை கடைகள் இருக்கும். மக்கள் அமர சீட்டிங் பே போன்ற இருக்கை வசதிகள் இருக்கும். டிஜிட்டல் ஸ்கிரீனில் பேருந்துகள் செல்லும் பகுதிகள், நேரம், பிளாட்பார்ம் இருக்கும். அதேபோல் ரயில் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட், முன்பதிவு கவுண்டர்கள் கூட இருக்கும்.

ரயில் நிலையம்: வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையில் ஸ்கைவாக்குடன் கட்டப்பட்டு வருகிறது. முதலில் இந்த வருடம் டிசம்பருக்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் மேற்கொள்ளும் வேகத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அடுத்த வருடம் ஜனவரியில்தான் கட்டுமானம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்டேஷனில் மொத்தம் 2 பிளாட்பார்ம் இருக்கும். ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க, இன்னொன்று லோக்கல் ரயில்கள் நிற்க. இதன் மூலம் இந்த ரயில்வே நிலையம் மல்டி மாடல் ரயில் நிலையமாக மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே நிலையம் ஸ்கை வாக்: சிஎம்டிஏ தரப்பு இது குறித்து வெளியிட்ட தகவலில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சில நாட்களுக்கு முன்பு இங்கே ஸ்கைவாக் அமைப்பதற்கு கொள்கை ரீதியான தொழில்நுட்ப ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அடித்தளம் அமைக்கும் பணி ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்க உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை அமைக்கப்பட உள்ள பாலத்திற்கு இந்த ஸ்கைவாக் இடையூறாக இருக்க கூடாது என்பதால் இதற்கான தொழில்நுட்ப அனுமதி வாங்க விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

அங்கே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் இனி அங்கே பேருந்துகளுக்கு இடையே கிராஸ் செய்ய நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+