ரியல் மெய்யழகன் ஹீரோ இவர்தான்! தினம் 60 கிலோ அரிசியை கிளிகளுக்கு உணவாக தரும் வள்ளல்
சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத சென்னை மாநகரில் ஒருவர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள மெய்யழகன் படத்தின் மூலம் பறவை மனிதர் சுதர்சன் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வாழும் இவர் தோற்றத்தில் அரவிந்த்சாமி போலவே இருக்கிறார். தினமும் இவரது வீட்டு மாடியில் ஆயிரக்கணக்கான கிளிகள் வருகின்றன. சிட்டுக்குருவிகள் கூடி உணவை அருந்தி மகிழ்கின்றன. இவ்வளவு பறவைகளுக்கும் விதவிதமாக குறுணை, நெல், அரிசி என கிலோ கணக்கில் வாங்கி உணவிட்டு வருகிறார்.

படத்தில் இவரது கதாபாத்திரம் இடம்பெற்றது பற்றிப் பேசிய சுதர்சன், "கார்த்திகை மாதங்களில்தான் புயல் உருவாகும். அப்போது மரங்களில் உள்ள பூ, பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். அதனால் பறவைகள் உண்ணப் பழங்கள் இருக்காது. அதை மனதில் வைத்துத்தான் ஜனவரி மாதங்களில் வீட்டுக்கு முன்பாக மா கோலம் போடுவோம். அரிசி வைத்து கோலம் போடுவோம். அதை உண்டு பறவைகள் வாழும். இதுதான் நம் கலாச்சாரம். அதுதான் கோலத்திற்கான கான்செப்ட். இதுதான் தமிழர் பண்பாடு. காலப்போக்கில் அது காணாமல் மறைந்துவிட்டது" என்கிறார் இந்தப் பறவை மனிதர்.
"கடந்த 1 வருடங்களாக கோ இயக்குநர் கண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். அவர்தான் 'மெய்யழகன்' படத்தின் இயக்குநர் பிரேம் குமாரிடம் சொல்லி, கதைக்கு ஏற்றதைப் போலவே ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி அழைத்துவந்தார். அவர் வந்து போன பிறகு சூர்யாவுக்கு தகவல் போனது. அவர் என் சேவையைப் பாராட்டி ஒரு நினைவுப் பரிசை கொடுத்து அனுப்பினார். இப்படித்தான் படத்தில் என் கதாபாத்திரம் உருவானது.
கார்த்தியும் அரவிந்த்சாமியும் நேரில் வந்து பார்த்தார்கள். அரவிந்த்சாமி தன் வீட்டில் வெளிநாட்டுப் பறவைகளை வளர்க்கிறார். கார்த்தி அவரது குடும்பத்துடன் 3 மணிநேரம் என் வீட்டில் வந்து தங்கி பறவைகளைப் பார்த்துவிட்டுச் சென்றார். என் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்தார்கள். நான் என்ன செய்கிறேன்? பறவைகளுடன் எப்படிப் பழகுகிறேன்? எப்படி உணவளிக்கிறேன் என்பதை எல்லாம் நோட் பண்ணார்கள். அதை அப்படியே படத்தில் பயன்படுத்தினார்கள்" என்கிற சுதர்சன் ஒரு நாளைக்கு 2 கிலோ அரிசியைச் சிட்டுக்குருவிகளுக்கு உணவாக வைக்கிறார்.

அதேபோல் பச்சைக்கிளிகளுக்கு நாள் ஒன்றுக்கு 60 கிலோ அரிசி வைக்கிறார். வருடத்திற்குக் கிட்டத்தட்ட 22 ஆயிரம் கிலோ அரிசியை உணவாகச் செலவிடுகிறார். இதற்காக ஆகும் பணம் பற்றி தான் கணக்குப் பார்ப்பதில்லை என்றும் சொல்கிறார். வரும் வருமானத்தில் 20% வீட்டுக்குப் போக 80% பணத்தை இந்தக் கிளிகளுக்காகத் தர்மம் செய்துவிடுவதாகச் சொல்கிறார்.
இந்தப் பழக்கம் இவருக்கு ஏற்பட என்ன காரணம்? பறவைகள் மீது அன்பு வர என்ன காரணம்? அதற்கான பதில் அவரிடம் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகள் முன்பாக தனது அப்பாவின் மறைவு இவர் மனதை அழுத்தி இருக்கிறது. அப்போது ஆறுதல் தேடி தினம் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். அண்டை வீட்டுப் பெண் ஒருநாள் காகத்திற்கு உணவளிப்பதைப் பார்த்துள்ளார். அது விதையாக இவர் நெஞ்சில் விழுந்துள்ளது. பின் அது ஆலமரமாகத் தழைத்து வளர்ந்துள்ளது. அதன் விளைவு இன்று அந்த ஆலமரத்தில் 10 ஆயிரம் கிளிகள், 500 புறாக்கள் என வந்து பசியாறிச் செல்கின்றன.

இவருடன் சேர்ந்து இவரது மனைவி வித்யாவும் இந்த சேவையைச் செய்துவருகிறார். திருமணமாகி 25 ஆண்டுகளாக இதே இடத்தில் வாழ்ந்துவருகின்றனர். வீட்டு அருகிலேயே ஓடை போகிறது. அதன் அருகில் மரங்கள் உள்ளன. நல்ல தனிமை உணர்வு தரும் இடத்தில் இந்த வீடு உள்ளதால் கிளிகள் படையெடுத்து வந்து உணவை உட்கொண்டு திரும்புகின்றன. தன் கணவருக்கு இந்த இயற்கையோடு வாழ்வதுதான் மகிழ்ச்சியைத் தருகிறது என உணர்ந்து கொண்ட பிறகு அவரை மேலும் அதில் ஈடுபட அனுமதித்தேன் என்றும் இந்தக் கிளிகளுக்காக தன் மகள் திருமணத்திற்குக்கூட அவர் தாமதமாகவே வந்தார் என்றும் அவர் சொல்கிறார்.
"நாம் இயற்கையைவிட்டு வெகுதூரம் போய்விட்டோம். அதை மீட்க வேண்டும். பறவைகள்தான் இயற்கையைக் காப்பாற்றுகின்றன. படப்பிடிப்புக்குக் கூட 5 பேரை மட்டுமே அழைத்துக்கொண்டு வரச் சொன்னேன். அவர் 500 பேரை அழைத்து வந்துவிட்டார். பறவைகள் பயப்படும். அதனால் கூட்டம் வேண்டாம் என்றேன். இரண்டு நாட்கள் அரவிந்த்சாமி காட்சிகளை எடுக்க திட்டமிட்டார்கள். அது இரண்டு நாட்களில் கிடைத்துவிட்டது" என்கிறார் இந்த ஜெண்டில் மேன் சுதர்சன்.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications