Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூச்சை முட்டும் சென்னை டிராபிக்! தலையை சுற்ற வைக்கும் காரணங்கள்.. தப்பிக்க இதுதான் வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எந்த அளவுக்கு பலனளித்துள்ளன? இதற்கான தீர்வுதான் என்ன? என்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சென்னை ஒரு பெரிய சிட்டி. ஐடி தொடங்கி, டிப்ளமோ முடித்தவர்கள், பள்ளி படிப்பை கூட தாண்டாதவர்கள் என அனைத்து தரப்பினருக்குமான வேலைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் மாநகரம் இது. சென்னை போனா எப்படியாவது பொழச்சிகலாம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் சென்னை வருகின்றனர். இப்படியாக குடியேறியவர்கள், இங்கேயே வசிக்கும் பூர்வகுடிகள் என மக்கள் தொகை அன்றாடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

This is the real reason for Chennais traffic congestion

இவர்கள் அனைவரும் காலை அவரவர் வேலைகளுக்கு செல்லும் போதும், வீடு திரும்பும்போதும்தான் சென்னையின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு அதிகம் என்பதை ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஏனெனில் அந்த அளவுக்கு டிராபிக். எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் பெரும் பணக்காரர்களின் வீடுகள் நகரத்தின் மையத்தில் இருக்க, பெரும்பான்மையினராக இருக்கும் சாமானியர்கள் நகரத்தின் விளிம்புகளை நோக்கி வேக வேகமாக பயணிக்கின்றனர்.

இவர்களை பொறுத்த அளவில் வேலை நேரம் என்பது 10-11 மணி நேரமாகும். அரக்கோணத்திலிருந்து, சூலூர்பேட்டையிலிருந்து, செங்கல்பட்டிலிருந்து, வேளச்சேரியிலிருந்து இவர்கள் தினமும் அலுவலகம் வந்து செல்லும் பயண நேரம் மட்டும் குறைந்தபட்சம் 2-3 மணிநேரம் ஆகும். இது தவிர, திருவொற்றியூர், முடிச்சூர், ஆவடி, அம்பத்தூர், திருமழிசை, பூந்தமல்லி என நகரத்தின் எல்லைகளிலிருந்து வேலைக்கு வந்து செல்ல 1-1.30 மணி நேரம் ஆகும்.

ஏனெனில் அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் சென்னையில் இருக்கிறது. சென்னை மட்டுமல்ல இந்தியாவின் பல நகரங்களிலும் இதே நிலைதான். ஆக இந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு என்ன காரணம்? வெறும் 20 கி.மீ தூரத்தை கடக்க ஏன் 2-3 மணி நேரம்? சென்னையில் என்னதான் பிரச்னை? என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.

இதற்கு கிடைத்த விடைகள் தலைசுற்ற வைக்கிறது. அடிப்படையில் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம், பொதுப்போக்குவரத்து பலவீனமடைந்ததுதான். அதாவது, அரசு பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படாது, ரயில்கள் போதுமான அளவில் இயக்கப்படாததுதான் இந்த டிராபிக் ஜாம்-க்கு முக்கிய காரணம். காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போன்றவர்களுக்கு சரியான நேரத்தில் பேருந்துகள் சென்னையில் கிடைக்கின்றதா?

இப்படி பேருந்துகள் கிடைத்தாலும், அதில் உட்கார்ந்து செல்லும் அளவுக்கு இடம் கிடைக்கிறதா? மாலையிலும் இதே நிலைமை இருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்ல முடியும். இது வேலைக்கு செல்வோரை அதிகம் பாதிக்கிறது. எனவே மக்கள் தனியார் போக்குவரத்தை நாடி செல்கின்றனர். ஆட்டோ, டாக்ஸி, பைக் டாக்ஸி என இந்த தனியார் போக்குவரத்து நீள்கிறது.

சென்னையின் ஏதாவதொரு சிக்னலில் நின்று பின்னால் திரும்பி பார்த்தால், அரசு பேருந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு? கார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை நம்மால் புரிந்துக்கொண்டுவிட முடியும்.

சரி ஏன் இந்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது? என போக்குவரத்து தொழிற்சங்க்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்தால் அவர்கள் சொல்லும் பிரச்னைகளை காது கொடுத்து கேட்க முடிவில்லை. அந்த அளவுக்கு நெருக்கடியில் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இருக்கின்றனர்.

This is the real reason for Chennais traffic congestion

ரொம்ப சிம்பிள் சார், சென்னை மாநகராட்சிக்கு புதுசா பஸ் வாங்கி 4 வருஷம் ஆச்சு, தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அந்த அளவுக்கு பழைய பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மத்திய அரசு 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளது. ஆனால் தமிழக போக்குவரத்து கழகத்தில் 500 பேருந்துகள் 15 ஆண்டுகளை கடந்தவை. இப்போதும் இந்த பேருந்துகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. சரி இதை ஓட்டாமல் இருந்தால் என்ன? என்று நீங்கள் கேள்வியெழுப்பலாம். அப்படி ஓட்டாமல் விட்டுவிட்டால் அரசு புது பேருந்தை வாங்குவதற்கு பதில், அந்த ரூட்டில் தனியார் பஸ் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கிவிடும் என்று தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர்.

இது மட்டுமல்லாது ஜெர்மன் கொலபிரேஷனுடன் மாசற்ற பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதற்காக ஜெர்மன் நிதியுதவி செய்கிறது. ஆனால் இப்படி இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தனியாரால் இயக்கப்படும். அதேபோல போக்குவரத்து நெரிசலை குறைக்க உலக வங்கி நிதியுதவி செய்கிறது.

இந்த நிதியை வைத்து பாலங்கள் கட்ட வலியுறுத்துகிறது. இதை கொண்டு பேருந்துகளை வாங்க உலக வங்கி ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. இதனால் பைக், கார் போன்ற தனியார் போக்குவரத்து அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இப்படியாக சென்னையின் டிராபிக் பின்னால் இவ்வளவு பெரிய அரசியல் இருக்கிறது. அடுத்தமுறை டிராபிக் ஜாமில் நின்றால் உலக அரசியல் பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள் மக்களே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+