திமுகவை பிரதமர் மோடி விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்
சென்னை: பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சமீப காலமாக திமுகவை அதிகம் அட்டாக் செய்து பேசி வரும் நிலையில், இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 அம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. 26 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் முழு வீச்சில் செயலப்ட்டு வருகிறார்கள். மறுபக்கம் பாஜகவும் மூன்றாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட தீவிரம் காட்டுகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில், தேசிய ஜனநயாக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடைபெற்றது.
இப்படி தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்ட சூழலில், மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக அவரது பேச்சில் திமுக மீதான விமர்சனம் அதிகமாக இருந்தது. காங்கிரசையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மோடி மட்டும் இல்லை, மத்திய நிர்மலா சீதாராமனும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடி, திமுகவை அதிகம் விமர்சிப்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
கேள்வி: நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தியது கடந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா?
பதில்: நரேந்திர மோடி என்ற பிம்பம் இன்று தகர்ந்துவிட்டது. எனவே, அவர் முகத்தை மட்டும் காட்டி பாஜகவால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் 39 கட்சிகளைக் கூட்டி வைத்து அவர் போஸ் கொடுத்தார். ஏன், அவர் தன் இமேஜை நம்பவில்லை? காங்கிரஸையும் ராகுலையும் தி.மு.க.வையும் மற்ற எதிர்க்கட்சிகளையும் மோடி விமர்சித்துப் பேசுவது இதனால்தான்.
கேள்வி: செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டீர்கள். அது ஏன்? தற்போது உச்சநீதிமன்றமே அவரைக் கைது செய்ததிலு, அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?
பதில்: பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும். பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும்.
அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பாஜகவில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன. எனவேதான் இவர்களது கைதுகளைக் 'குற்ற விசாரணைகள்' என நாங்கள் பார்க்கவில்லை. 'அரசியல் விசாரணைகள்' ஆகத் தான் பார்க்கிறேன்" என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications