இதுதான் வேலையே.. ஆளுநர் ரவியை மோடி தமிழ்நாடு அனுப்பியதே அதுக்குதான்! சீக்ரெட்டை சொன்ன முக்கிய புள்ளி
: ஆளுநர் ஆர். என் ரவியை முக்கியமான திட்டத்தோடுதான் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அனுப்பி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் - ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதோடு சட்டசபையிலேயே ஆளுநர் ஆர்.என் ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. ஆளுநர் ரவியின் உரை நீக்கப்பட்டு அரசின் உரை அதில் சேர்க்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் அரசுக்கு துதி பாடுவது போல பேச முடியாது. காலாவதியான கொள்கைகளை கொண்ட திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சி நடத்துகிறார்கள்.
திராவிட ஆட்சி முறையைப் பாராட்டி நான் ஆதரிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். முதலில் அதுமாதிரியான ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் வார்த்தை மட்டுமே ஆகும். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக இந்த வார்த்தை இருப்பதாகவும் 'ஒரே பாரதம், ஒரே இந்தியா' கருத்தை விரும்பாத சித்தாந்தமாக திராவிட மாடல் சித்தாந்தமாக உள்ளது, என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், ஆர். என் ரவியின் இந்த பேட்டி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஆளுநர் ஆர். என் ரவிக்கு சட்டசபை உரை பிடிக்கவில்லை என்றால், அவர் பதவியை விலகிவிட்டு செல்ல வேண்டும். அவரிடம் கொடுத்ததை அவர் படிக்க வேண்டும். ஆளுநர் உரை என்பது அரசாங்க உரை. அவர் அவமானம் அடைந்து விட்டதாக கருதக்கூடாது.
அரசாங்கம் தயாரிக்கும் உரை அது. அதை ஆளுநர் அப்படியே பேச வேண்டும். அரசாங்க உரைதான் இது என்பதால் அந்த உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநரை பேச சொல்லவில்லையே? அப்படி இருக்கும் அவர் பேசித்தான் ஆக வேண்டும்,.
அவர் பேசுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆளுநர் உரை என்பது தனிப்பட்ட அவரின் உரை கிடையாது. அவர் பேசுவது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அவர் பேசுவது அபத்தமாக இருக்கிறது.
இந்த மாதிரியான பணிகளை செய்ய.. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீர்குலைப்பதற்காக அவரை மோடி அனுப்பி இருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் மோதல் இல்லையே. ஏன்.., இதை பற்றி கமெண்ட் சொல்ல மாட்டேன் என்று ஆளுநர் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் என்று எல்லா மாநிலங்களிலும் பிரச்சனை. கோர்ட் வரை பிரச்சனை சென்றுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் இடங்களில் ஆளுநர் அரசை எதிர்ப்பது என்பது பாஜகவின் பிளான். பாஜகவின் அஜெண்டா.

பாஜகவின் திட்டமிட்ட பிளான் இது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் - முதல்வர்களுக்கும் இதனால்தான் மோதல் இல்லாமல் இருக்கிறது. பாஜக மாநிலங்களில் சட்ட ஒழுங்கு மிக மோசமாகி உள்ளது. அங்கே போய் ஆளுநர் ரவி சட்ட ஒழுங்கை பற்றி பேச வேண்டியது தானே.
ஆளுநருக்கு தான் எழுதிக்கொடுத்ததை படிக்க விரும்பவில்லை என்று ராஜினாமா செய்துவிட்டு போகட்டும். குடியரசுத் தலைவர் உரையில் மோடியை பாராட்டி பேசுகிறாரகளே. மோடியை எதோ கடவுள் போல காட்டுகிறார்களே.. அதை குடியரசுத் தலைவர் பேசுகிறாரே.

தமிழ்நாடு தனிநாடு என்று சொன்னால் அதை படிக்க வேண்டியது இல்லை.. திராவிட மாடல் என்பதில் என்ன தவறு. உரையில் இருந்த சிலவற்றை ஆளுநர் படிக்கவில்லை. சிலவற்றை அவராக சேர்த்து படிக்கிறார்.
முதல்வரின் உரையைத்தான் ஆளுநர் படிக்கிறார். அவர் மாற்றி படிப்பது தவறு. அதனால்தான் ஆளுநர் பேசியது தவறு என்று முதல்வர் சொல்லி, அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அச்சிடப்பட்ட உரையில் என்ன இருக்கிறதோ அதைதான் ஆளுநர் படிக்க வேண்டும்.
அதை மாற்றுவதற்கான உரிமை ஆளுநருக்கு கிடையாது. அந்த மரபை ஆளுநர் மீறிவிட்டார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications