புதிதாக வீடு கட்டுவோருக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நல்ல செய்தி... தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பர்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், புதிதாக வீடு கட்டுவோர் மின் இணைப்பு பெறும் நடைமுறையை அண்மையில் எளிதாக்கிய நிலையில், அடுத்ததாக மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக் கட்டணங்களை குறைத்து அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக வீடு கட்டி மின் இணைப்பு வாங்குவது அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பித்து மின் இணைப்பு பெறவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது..

வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பப் படிவம்-1-ஐ வாங்கிப் பூர்த்தி செய்து மின்வாரியத்தில் அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துக்கு எவ்விதக் கட்டணமும் வாங்கப்படாது. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படைத் தகவல்களுக்கு உரிய முறையில் நீங்கள் பதிலளிப்பது அவசியம் ஆகும்.
அதேநேரம் மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான உரிமையாளர் என்பதற்கான சான்றிதழைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான, சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களை மின்வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் தற்போது தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற விதிமுறையாகும்.
அதேநேரம் புதிய வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்று சான்றிதழ் அவசியம் என்று இதுவரை இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொது கட்டட விதிகள் தொடர்பாக 2019ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய, சி.சி., எனப்படும், பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அரசு அறிவித்தது.
இந்த சட்டப்படி மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும் என்றும் இந்தச் சான்று பெற்ற பிறகே, குடிநீர், வடிகால், மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல இடங்களில், பணி நிறைவு சான்று வாங்காமல், மின் இணைப்புகள் பெறப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மின் இணைப்பு விதிகளில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை அண்மையில் மின்வாரியம் தளர்த்தியது.
என்ன தளர்வு: ஒரே கட்டிடத்தில் 3 வீடுகள் இருந்தால் அதற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டிட முடிவு சான்று (கம்ப்ளீசன் சான்று) மின்சார வாரியத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கட்டிட முடிவு சான்று 3 வீடுகள் மற்றும் 750 சதுர மீட்டர் வரை உள்ள கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் கட்டிடத்தின் உயரம் 12 மீட்டர் முதல் 18.30 மீட்டர் உயரம் வரை உள்ள கட்டிடம் மற்றும் உயரம் இல்லாத கட்டிடம் என்றும், 18.30 மீட்டர் உயரத்திற்கு மேல் உயரமான கட்டிடங்கள் என்றும் என இரண்டு வகையான கட்டிடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தற்போது 8 வீடுகள் வரை ஒரே கட்டிடத்தில் இருந்தாலும் அதற்கு பணி நிறைவு சான்று தேவை இல்லை. மேற்கண்ட கட்டிடங்களுக்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மின் இணைப்பு பெறுவது எளிதாகி உள்ளது.
மின்சாதனங்கள் இடம் மாற்றம்: அதேபோல் தற்போது பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பித்தால்,. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இது பொதுமக்களுக்கு பெரிய சுமையாக இருந்த நிலையில், இந்தக் கட்டணத்தை மின்வாரியம் குறைத்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், " பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம்பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பிக்கும்போது, மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணமாக செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில், இந்த 22 சதவீத நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணத்தை 5 சதவீதமாக குறைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகுவாகக் குறையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம்












Click it and Unblock the Notifications