இதுதான் மேட்டுப்பாளையம் டூ சென்னை வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் S11 கோச் நிலைமை.. பயணி பதிவு
சென்னை: இதுதான் 11.2.24 அன்றைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் S11 coach நிலைமை. மொத்த கம்பார்ட்மெண்ட்லயும் முன்பதிவு செய்யாத ஆட்கள் ஏறி வழியை ஆக்கிரமித்துவிட்டார்கள்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர், முன்பதிவு செய்யாமல் ஏறியவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து அங்கேயே தங்க விட்டுவிட்டார்.. அப்புறம் ரிசர்வ் செய்ததில் என்ன பயன்? என்று பயணி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் ஓடும் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில், முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி செல்வது தினமும் தொடர்கிறது. இந்த விவகாரத்தில் ரயில்வே உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில் சென்னையில் இருந்து தினமும் ஏராளமான ரயில்கள் ஓடுகின்றன. நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நெல்லை வந்தே பாரத், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸிபிரஸ் என ஏராளமான ரயில்கள் தென்மாவட்ட வழித்தடத்தில் தினமும் ஓடுகிறது. இதேபோல் சிதம்பரம், தஞ்சை, கடலூரை சுற்றி செல்லும் வகையில் சோழன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், அந்தியோதியா எக்ஸ்பிரஸ் உள்பட ஒரு சில ரயில்கள் ஓடுகின்றன.
கோவை சேலம் வழித்தடத்தை பொறுத்தவரை, சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை வந்தே பாரத், ஏலகிரி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரயில்கள் ஓடுகின்றன.. சென்னையில் இருந்து திருச்சி வழி ரயில் வழித்தடத்திலும், சேலம் வழி ரயில் வழித்தடத்திலும் தினமும் பல ஆயிரம் பயணிகள் பயணிக்கிறார்கள்.
அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக பகல் நேர ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறுவதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். இதன் காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களால் நடந்து கழிவறைக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது.. இதை பொதுவாக டிடிஆர் கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் வடமாநிலத்தவர்களால் இந்த நிலை அதிகமாக இருக்கிறது.
இதுவரை பகல் நேர ரயில்களில் தான் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி வந்த நிலையில், தற்போது இரவு நேர ரயில்களிலும் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட ரயில்களிலும் ஏறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.. இதனால் இரவில் ரயிலில புக்கிங் செய்து வருபவர்கள் நிலை கடினமாகி உள்ளது. இரவு நேர ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அவர்கள் கீழே உட்கார்ந்து கொள்வதால் கீழே இறங்கி கழிவுறைக்கு கூட போக முடியாத நிலை பல நேரங்களில் ஏற்படுகிறது. ரயிலில் சமானிய நடுத்தர மக்கள் தான் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். இப்போது அவர்களில் பலர் ஏன் புக்கிங் செய்து இப்படி வர வேண்டும் என்ற மனநிலைக்கு நொந்து போய் உள்ளனர்.

அண்மையில் திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் ஏறிய முன்பதிவு செய்யாத பயணிகளால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எங்கள் சீட்டே எங்களுக்கு கிடைக்கவில்லை. நார்மல் டிக்கெட் வாங்கிட்டு எல்லாரும் உள்ள வந்துவிட்டாரகள். டிடிஆர் வந்து எதுவும் செக் பண்ணவில்லை" என்று வேதனை தெரிவித்தார். அவரது ஆதங்கம் நிறைந்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. ஸ்லீப்பர் கோச் ரயிலில் ஏறி பலர் தங்களது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அருள் ஞானபிரகாஷ் என்பவர் நேற்று வெளியிட்ட பதிவில், இதுதான் 11.2.24 அன்றைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் S11 coach நிலைமை. மொத்த கம்பார்ட்மெண்ட்லயும் முன்பதிவு செய்யாத ஆட்கள் ஏறி வழியை ஆக்கிரமித்துவிட்டார்கள்.
ஆனால் டிக்கெட் பரிசோதகர், முன்பதிவு செய்யாமல் ஏறியவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்து அங்கேயே தங்க விட்டுவிட்டார்.. அப்புறம் ரிசர்வ் செய்ததில் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications