வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றினால், அவர்களிடம் சொத்தை திரும்ப பெறுவது எப்படி? காவல்துறை பதிவு
வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றினால், அவர்களிடன் சொத்தை பறிகொடுத்தால, நிச்சயம் சட்டம் உங்களைக் காக்கும்.. இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட பதிவினை பற்றியும், பெற்றோர்கள் சொத்தை எழுதி கொடுக்கும் போது கவனிக்க வேணடிய இரண்டு விஷயங்கள் பற்றியும் பார்ப்போம்.
சென்னை மாநகர காவல் துறை வெளியிட்ட பதிவு ஒன்றில், பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவு 23 இன் படி, அடிப்படை வசதிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் ஒரு சொத்து பிள்ளை அல்லது உறவினருக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பிறகு சொத்தை பெற்றுக் கொண்டவர் அதை செய்ய தவறினால, அந்த சொத்து பரிமாற்றம செல்லாது என தீர்ப்பாயம் அறிவிக்க முடியும்" என்று கூறியுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட இந்த சட்டப்பிரிவின் கீழ் முதியோர்கள் தாராளமாக பிள்ளைகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்க முடியும். சப் கலெக்டரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ புகார் அளித்து பத்திரப்பதிவினை ரத்து செய்ய வைக்க முடியும். ஆனால அதில் சில சிக்கலும் உள்ளது.
பல முதியவர்கள், தங்களது வயதான காலத்தில், தனது பிள்ளைகள் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், சொத்தை தானமாக எழுதிக்கொடுக்கிறார்கள். அப்படி சொத்தை எழுதி கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு சொத்தை எழுதிவைக்கும்போது, வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். 'அன்பின் வெளிப்பாட்டால்' சொத்தை எழுதிவைப்பதாக குறிப்பிட்டிருந்தால், தானமாக கொடுத்த சொத்தை பெற்றோர் உடனடியாக மீட்டுக்கொள்ள முடியும். சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தெளிவுபடுத்தியுள்ளது.
பிள்ளைகள் மீதான பாசத்தின் காரணமாக இறுதிவரை சொத்தை திருப்பி கேட்காமல் தங்கள் கொடுமைகளை சகித்து கொண்டு வாழ்கிறார்கள். ஒரு உண்மை கதையை இப்போது பார்ப்போம். கணவன் மனைவி, அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். நன்றாக சம்பாதித்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார்.தன்னிடம் இருந்த சேமிப்பு, சொத்து, அனைத்தையும் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரது மனைவி மறைந்தார். அவரிடம் அப்போது சொத்துக்களோ, சேமிப்பு பணமோ சுத்தமாக இல்லை. மனைவி இருந்தவரை சாப்பாடு கேட்காமலேயே வரும்..சாப்பாடு சரியில்லை என்றால் தட்டு பறக்கும். ஆனால் மனைவி மறைந்த பின்னர் அவர் நடைபிணமாக மாறினார்.
அவர் பசித்தாலும் மருமகளிடம் சாப்பாடு கேட்க தயங்கினார். சாப்பாட்டை போட்டு சாப்பிட பயந்தார்.. காரணம் மருமகள் பேச்சு வேறுமாதிரி இருந்தது. மகனோ எதையும் கண்டுகொள்ளவில்லை.. சாப்பாடு கேட்க முடியாமல், செலவுக்கு பணம் கூட இல்லாமல் தவித்தார். மகளும் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.. அவரிடம் ஒரு வேளை சேமிப்போ, சொத்தோ இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை பிள்ளைகள் மதித்திருப்பார்கள். பாவம் கடைசி வரை எதையும் வெளியில் சொல்லாமல் வேதனையை மனதில் வைத்துக் கொண்டு மறைந்து போனார். அவர் சொத்தை திருப்பி கேட்க வேண்டும் என்ற மனநிலை எல்லாம் அவருக்கு வந்தது கூட இல்லை.
வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றி விட்டால், சட்டம் உங்களைக் காக்கும். எப்படி தெரியுமா? இந்தப் பதிவை படியுங்கள். அனைவருக்கும் பகிருங்கள். பயன் பரவட்டும். #அவள் #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL pic.twitter.com/nr6wArnmtB
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) January 3, 2024
ஆனால் இன்றைய சூழலில் தங்கள் பிள்ளைகள் கடைசி காலத்தில் கவனிக்க மறுத்ததால், சொத்தை பிள்ளைகளிடம் மீட்க பெற்றோர்களால் முடியும். அதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று சில விதிகளை முன்வைத்து அவர்கள் சொத்தை எழுதி வைப்பதாக எழுத்துப்பூர்வமாக குறிப்பிட வேண்டும். அல்லது, 'அன்பின் வெளிப்பாட்டால்' எழுதிவைப்பதாக பத்திரத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விதங்களில் ஏதாவது ஒருவிதத்தில் ஆவணத்தில் குறிப்புகள் இருந்தால், சொத்தை பெற்றோர்கள் மீட்கமுடியும். இந்த இரண்டு விதிகள் இல்லாமல், தனது சொத்தை தானமாக எழுதிவைக்கிறேன் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தால், சொத்தை மீட்பது கடினம் ஆகும்-












Click it and Unblock the Notifications