"சங்பரிவார்" சனாதனிகள் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இயங்கிய பங்காரு அடிகளார்..வீரவணக்கம்- திருமாவளவன்
சென்னை: சங்பரிவார் சனாதனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் அவர்களுக்கு ஒரு சவாலாக இயங்கியவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்; அடிகளாருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் திருமாவளவன் வெளியிட்ட பதிவு:பெண்களை கருவறைக்குள் அனுப்பிய முதல் பீடாதிபதியான சித்தர்பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் பிறப்பால் ஆண் என்றாலும் அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்குத் தாய்மை பண்புகளால் மகளிரின் பேரன்பைப் பெற்றவர்.

வீரவணக்கம்: ஆன்மீகத் தளத்தில் பெண்களுக்கான மதிப்பீட்டைப் பெரிதும் உயர்த்தியவர். சங்பரிவார் சனாதனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமல் அவர்களுக்கு ஒரு சவாலாக இயங்கியவர். மறைந்த அடிகளாருக்கு விசிக சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
செவ்வாடை பக்தர்களின் 'அம்மா': திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சித்தர் பீடத்தின் நிறுவனர் - குரு பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெண்களை கருவறைக்குள் அனுப்பிய முதல் பீடாதிபதியான சித்தர்பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் பிறப்பால் ஆண் என்றாலும் அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்குத் தாய்மை பண்புகளால் மகளிரின் பேரன்பைப் பெற்றவர். ஆன்மீகத் தளத்தில் பெண்களுக்கான… pic.twitter.com/itfrkYWwgn
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 20, 2023
ஜனநாயகமாக்கப்பட்ட பக்தி: சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். ஆண்கள் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்யமுடியும் என்கிற நெடுங்காலத்து நடைமுறையை மாற்றி பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது வெகுவாகப் பெண்களை ஈர்த்தது மட்டுமின்றி ஆன்மீகத்திலும் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. இது பக்தியை சனநாயகப்படுத்திய ஆன்மீகப்புரட்சி என்று கூறத் தக்கதாகும்.
சனாதனம் தவிர்த்தவர்: ஆன்மீகப் பணியோடு பல்வேறு கல்வி நிறுவனங்களை உருக்கி கல்விப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். கல்வியில் பின் தங்கியிருந்த செங்கல்பட்டு உள்ளிட்ட அப்பகுதி தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர்; சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர். அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications