திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்றி நடுத்தெருவில் விட சதி நடந்தது.. திருமாவளவன் ஓபன் டாக்!
சென்னை: மது ஒழிப்பு மாநாட்டை முன்வைத்து திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்றி நடுத்தெருவில் விட நினைத்தார்கள். அவர்கள் அஜெண்டா அவ்வளவுதான்... சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் 19 மாதங்களே இருக்கிறது..அதற்கு முன்னரே சூட்டைக் கிளப்பிவிட்டு பார்க்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சேலத்தில் இன்று மது ஒழிப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது: இங்கே அனைத்து தரப்பாறும் ஒருங்கிணைந்து சேர வேண்டிய இடத்தில், செயல்பட வேண்டிய இடத்தில், செயல்படுவதற்கான ஒரு அரசியல் முதிர்ச்சி இங்கே குறைபாடாக இருக்கிறது. அது தான் முக்கியம். தேர்தலுக்கு 25-ல் 12 மாசம் இருக்குது.. இதுல அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூணு மாதம் இருக்குது. 26-ல் நான்கு மாதம் இருக்கிறது. 19 மாதம் தேர்தலுக்கான இடைவெளி உள்ளது. ஆனால் முன்னாடியே இப்படி வந்து ஒரு சூட்ட கெளப்பி விடுதலைச் சிறுத்தைகளை அந்த கூட்டணியில் இருந்து வெளியேத்திட்டு எங்க அஜெண்டா முடிஞ்சுது; திருமாவளவன் நடுத்தெருவுக்கு வந்துட்டாரு.. என கணக்குப் போட்டார்கள். அவ்வளவுதான்.

அரசியல் மெச்சூரிட்டி: தோழர்களே நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும். நான் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அந்த பொலிட்டிக்கல் மெச்சூரிட்டி இருப்பதினால்தான் அந்த வார்த்தை வருகிறது. உள்நோக்கம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து நாம் செயல்பட்டால் என்ன தப்பு? மது ஒழிப்புக்காக தானே அழைக்கிறோம்? அந்த பேட்டியில் அடுத்த அடுத்த வார்த்தையை என்ன சொல்றேன்னா இதை எலெக்ஷன் ஓட முடிச்சு போடாதீங்க தேர்தல் நிலைப்பாடு வேறு - மது ஒழிப்புக்கான களம் வேறு என்பதுதானே.
வடிவேலு வசனம் மாதிரி முதல்வர் பதவி: ஜனங்களோட நீ ரொம்ப நெருக்கமா இருந்து அவங்க குரலை, உணர்வை பிரதிபலிக்கிறேன் என சொன்னால் ஒருபோதும் மக்கள் நம்மை கைவிட்டு விடமாட்டார்கள். ஆனால் நான் தான் ரவுடி.. நான் தான் ரவுடி.. என்று வடிவேல் சொல்கிற மாதிரி... நான்தான் அடுத்த முதல்வர்.. நான்தான் அடுத்த முதல்வர்.. என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்முடைய களமும் நம்முடைய செயலும் தான் நம்மை அந்த இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும். ஒரு கட்டத்தில் பொது மக்களே பேசுவாங்க.. ஏன் திருமாவளவன் வரக்கூடாதா என்று மக்கள் பேசுவார்கள். யார் யாரோ அந்த பீடத்திற்கு ஆசைப்படுகிறபோது திருமாவளவன் அந்த இடத்திலே அமர்ந்தால் என்ன என்று உழைக்கிற மக்கள் சொல்லட்டும். வாக்காளர்கள் சொல்லட்டும்.
ஆதவ் அர்ஜூன்தான் காரணமா?: விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் தான் இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம்; திருமாவளவனை அவர்தான் இயக்கி கொண்டு இருக்கிறார்; அவர்தான் இயக்குநர் என்கிறார்கள். திருமாவளவன் ஹீரோவா நடிச்சு அந்த படத்தை இயக்குற அளவுக்கு இன்னும் யாருக்கும் இங்கே தகுதி இல்லை. அப்படி தான் நான் சொல்லுவேன். என்னை இயக்குவதற்கான இயக்குநர்கள் இங்கே யாரும் இல்லை.
மதுபான ஆலைகள்: மதுபான ஆலைகளை ஒரே நாளில் மூடிவிட முடியாது. ஏனெனில் பல நூறு ஏக்கர் நிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று முதலீடு செய்து, இறக்குமதி செய்து, ஆயிரக்கணக்கானோரை வேலைக்கு அமர்த்தி செய்யப்படுகிற தொழில். படிப்படியாகத்தான் நாம் செய்ய வைக்க முடியும். இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications