அதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்
Recommended Video
சென்னை: அதிமுகவின் பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் கட்சி பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு கே வெங்கடாசலம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவரிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார் தோப்பு வெங்கடாசலம்.
தற்போது கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த போது தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என போர்க்கொடி உயர்த்தியிருந்தார். விரைவில் தினகரன் பக்கம் தாவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கட்சி தலைமை சமாதானம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications