மே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்
மே மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்குமென மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்
சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டு லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே பாதுகாப்பாக தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். மே மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு நாள் ஊரடங்கு என்று அறிவித்தாலும் கொரோனா கட்டுப்பட்டதாக தெரியவில்லை நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் பல இடங்களில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். நோய் பாதிப்பு அதிகரித்து சிலர் உயிரிழக்க நேரிடுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிப்பை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையும். ஒரு சிலர் 4 நாட்களில் டிஸ்சாரஜ் செய்யப்படலாம். சிலர் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றார்.
அதிகளவில் அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே தனிமையில் இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் இருக்கின்றன அங்கு வந்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் மே மாதம் மத்தியில் பாதிப்பு உச்சத்தில் இருக்கும். மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 4 நாட்கள் மக்கள் எல்லாரும் மாஸ்க் அணிந்தாலே பாதிப்பு குறைந்து விடும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications