உயிர்க் கணக்கு 49தான்.. கஜாவின் தாண்டவத்திற்குப் பலியான மரங்கள் ஆயிரமாயிரம்!
Recommended Video

சென்னை: கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49தான். ஆனால் காலம் காலமாக வளர்த்து வந்த, வளர்ந்திருந்த மரங்கள் ஆயிரக்கணக்கில் அடியோடு வீழ்த்தப்பட்டுள்ளன. பல ஊர்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மண்ணைப் போட்டு விட்டது கஜா.
கால் நடைகள், மரங்கள், பயிர்கள் என கிட்டத்தட்ட ஒரு முழு வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள் ஆயிரக்கணக்கான விவசாயிகள். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
டெல்டா மக்களின் சாபமோ என்னவோ முன்பு தண்ணீரே இல்லாமல் வறண்டு போயிருந்தது அவர்களது வாழ்க்கை. இன்று கஜா புயலால் அவர்கள் மீண்டும் ஒரு பெரும் சோகத்தை, அடியை சந்தித்துள்ளனர். எப்போது மீண்டு வரப் போகிறார்கள் இவர்கள் என்பது மிகப் பெரிய கவலையாக மாறி நிற்கிறது.

ஆயிரக்கணக்கான மரங்கள்
டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மரங்களை வீழ்த்தி விட்டுப் போயுள்ளது கஜா. ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன. எல்லாமே வளர்ந்து ஆளான மரங்கள். மீண்டும் வளர்க்க பல வருடம் ஆகும்.

புதுக்கோட்டையில் கடும் பாதிப்பு
இதேபோல புதுக்கோட்டை மாவட்டமும் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கஜாவால் ஏற்பட்ட பேய் மழை மற்றும் சூறைக் காற்றால் இந்த மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான மரங்கள், பயிர்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மிகப் பெரிய பொருளாதார இழப்பை கிராமங்கள் சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தென்னை, வாழை பாதிப்பு
பெரும்பாலும் தென்னை, வாழைதான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல ஊர்களில் அடியோடு இவை வீழ்ந்துள்ளன. காய்ப்பு மரங்கள்தான் மிகப் பெரிய அளவில் அடி வாங்கியுள்ளன. இதுதவிர சாலையோர புளியமரங்கள் அடியோடு வீழந்துள்ளன. இவையெல்லாம் 40,50 வருடங்களுக்கும் மேலான வயதுடையவை.

வீடுகள், பொருட்கள் சேதம்
இதுதவிர வீடுகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. குடிசை வீடுகள் அதிகம் உடைய மாவட்டம் நாகை என்பார்கள். பல குடிசை, ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சரி செய்யவே பல நாட்களாகும் என்று சொல்கிறார்கள்.

அதிராம்பட்டினத்தில் அதிக சேதம்
அதிராம்பட்டினத்தில்தான் கஜா புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது. அங்குதான் மிகப் பெரிய அளவிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு தென்னை விவசாயம் மிகப் பிரபலமானது. பொள்ளாச்சிக்கு அடுத்து தென்னை விவசாயம் இங்குதான் அதிகம். இங்கு கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் புயலில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உயிர்களுக்கு இணையானது
விவசாயிகளைப் பொறுத்தவரை உயிர்களுக்கு இணையானது விவசாயம். அப்படிப்பட்ட விவசாயத்தை இப்படி இயற்கை வந்து வாரிச் சுருட்டிச் செல்வதா அவர்கள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர். எப்படி கடலூர் மாவட்டம் தானே புயலில் சிக்கி சீர்குலைந்ததோ அதேபோல இப்போது நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கஜாவிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளன.
செய்தி, வீடியோ, புகைப்படங்கள்: நர்மதா முத்து
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications