Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீளுமா மீனம்பாக்கம்.. தவிக்கும் தாம்பரம்.. திணறும் திருச்சி ரோடு.. சென்னை மறந்த 3 விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னை, மொத்த தமிழ்நாட்டின் அடையாளமாகவும், பல லட்சம் பேருக்கு வேலை தரும் இடமாகவும் இருக்கிறது. சென்னை கடந்த 25 வருடத்தில் அடைந்த வளர்ச்சி, கற்பனையிலும் எதிர்பார்க்க முடியாத வளர்ச்சி ஆகும். ஆனால் இந்த காலத்தில் சென்னையில் செய்ய தவறிய 3 விஷயங்களால் மொத்த தமிழ்நாடும் சிக்கலில் தவிக்கிறது. அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

சென்னை என்பது வந்தாரை வாழ வைக்கும் பூமியாகும். ஒரு காலத்தில் சென்னை என்பது கிண்டிக்கு பிறகு கிடையாது. தாம்பரம் எல்லாம் புறநகர் பகுதி. தென்சென்னையில் வேளச்சேரிக்கு பின்னாடி ஒன்றுமேஇல்லை. ஆங்காங்கே கிராமங்கள் தான் இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது, அது கிட்டத்தட்ட புறநகர் பகுதியாக இருந்தது. ஆனால் இன்று கோயம்பேடு மையப்பகுதியாக மாறி உள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்த அம்பத்தூர், தாம்பரம், பூந்தமல்லி, சோழிங்கநல்லூர் பகுதிகள் இன்று சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டன.

chennai trichy airport

சென்னை என்பது வடக்கே பொன்னேரி தொடங்கி தெற்கே செங்கல்பட்டு வரை வளர்ந்துவிட்டது. மேற்கே திருவள்ளூர் வரையிலும், தென்மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் வளர்ந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஐந்து நாடாளுமன்ற தொகுதிகள் வருகின்றன. சுமார் 2 கோடிக்கும் அதிகமாக மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சென்னையில் வந்து வசிக்கிறார்கள். பலர் ரேஷன் கார்டை சென்னைக்கு மாற்றவே இல்லை.. இதனால் சென்னையில் உண்மையான மக்கள் தொகை இன்று வரையிலும் புள்ளிவிவரத்துடன் வெளிவரவில்லை..

சென்னையில் ஐடி துறையும், ஆட்டோ மொபைல் துறையும், எலக்ட்ரானிக்ஸ் துறையும், துறைமுகமும், சினிமா துறையும் ஏற்படுத்தியுள்ள வேலைவாய்ப்பு மிக அதிகம். சென்னை பல்வேறு தொழில் நுட்ப நிறுவனங்கள், பல ஆயிரம் சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் என நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. தமிழ்நாட்டில் எங்கு படித்தவர்களுடம், உடனே வரும் இடம் சென்னை தான். சென்னை அடுத்த 25 வருடங்களில் எந்த அளவிற்கு வளரும் என்று கணித்த அரசு, காஞ்சிபுரம் வரையிலும், அரக்கோணம் வரையிலும் வடக்கே ஆந்திரா பக்கம் வரையிலும் சிஎம்டிஏவில் சேர்த்துவிட்டது. ஆனால் சென்னைக்கு காலத்திற்கு ஏற்றார் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. சாலை, ரயில், விமானம் என மூன்று விஷயத்திலும் நடந்த தவறுகள் சென்னைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிக்கலாகி உள்ளது.

சென்னை திருச்சி 8வழிச்சாலை : சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலை என்பது தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் தினமும் வந்து செல்லும் சாலையாகும். தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் செல்கின்றன. தாம்பரம் முதல் திருச்சி வரை மக்கள் நெருக்கத்திற்கு ஏற்ப சாலையை 8 வழிச்சாலையாக எப்போதோ மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி மாற்றப்படவில்லை.. அதேபோல் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை வளர்ந்துள்ள வளர்ச்சி என்பது சென்னை மாநகரின் உள்பகுதியைவிடவும் அதிகமாகும். ஏராளமான நிறுவனங்கள் இந்த பகுதிகளில் தான் உள்ளன. இந்த சூழலில் அங்கு மக்கள் நெருக்கமும் அதிகமாக உள்ளது.

எனவே தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்திருக்க வேண்டும். அதையும் அரசுகள் உடனடியாக செய்யவில்லை. இந்த இரண்டு விஷயத்திற்கு திட்டமெல்லாம் போடப்பட்டது. ஆனால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்காததால் , செலவு தொகை மட்டுமின்றி, சிக்கலும் ஒவ்வொரு வாரம் அதிகரித்து வருகிறது. வார இறுதிகள் வந்தாலே விபத்துகள் சகஜமாகிவிட்டது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் என்பது பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.

செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதை: அடுத்தாக மிக முக்கியமான விஷயம்.. மின்சார ரயில் போக்குவரத்து. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றியிருக்க வேண்டும். ஏனெனில் சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரில் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயிலில் செங்கல்பட்டு வரையில் பயணிக்கிறார்கள்.

ஆனால் எழும்பூர் முதல் தாம்பரம் வரை நான்கு பாதையும், அதன்பிறகு செங்கல்பட்டு வரை 3 பாதையும் தான் உள்ளது. நான்காவது பாதை அமைக்கப்பட்டால் சென்னை புறநகருக்கு மின்சார ரயில்களை அதிக அளவு இயக்க முடியும். அதேபோல் அந்த பாதையில் வரும் காலத்தில் மெட்ரோ ரயில்களும் இயக்கும் அளவிற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும். எனவே அந்த பகுதியில் நான்காவது பாதை அமைத்தால் மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்றுவரை அந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

சென்னை புதிய விமான நிலையம்: மூன்றாவது விஷயம் சென்னை விமான நிலையம். சென்னை சர்வதேச விமான நிலையம் என்பது, தென்னிந்தியாவிலேயே ஒரு காலத்தில் மிகப்பெரிய விமான நிலையமாக இருந்தது. இப்போது ஹைதராபாத்தும், பெங்களூரும் அந்த இடத்தை பிடித்துக்கொண்டன. இந்த 25 வருடங்களில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் எந்த அளவிற்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதோ, அதுபோல் சென்னை விமான நிலையம் அதிகப்படியான விமானங்களால் நெரிசலை சந்தித்துள்ளது. டவுன் பஸ்களை விடவும் அதிக அளவில் விமானங்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளன. ஆனாலும் விமான நிலையம் போதவில்லை..

மிகப்பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் இல்லை. எனவே சென்னை பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற புதிய விமான நிலையம் மிக அவசியம் ஆகும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அரசு, கடந்த 20 வருடம் முன்பே இதனை நினைத்திருந்தால், சென்னையின் ஈசிஆர் பகுதியிலோ அல்லது ஓஎம்ஆர் பகுதியிலோ அமைத்திருக்க முடியும். இல்லை என்றாலும் பூந்தமல்லிக்குள் விமான நிலையத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் அரசு தாமதம் செய்த காரணத்தால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் தள்ளிப்போக (காஞ்சிபுரம் அருகே) வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் உடனடியாக அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சென்னையில் புதிய விமான நிலையம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவது, செங்கல்பட்டு வரை நான்காம் ரயில் பாதை அமைப்பது போன்றவற்றை அமைந்திருந்தால், மொத்த தமிழ்நாடும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும். சென்னையும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டை அடைந்திருக்கும். இனிமேலாவது அரசு இந்த விவகாரத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+