சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பாவிகளை பாருங்க.. ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோயாளிகள் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Recommended Video

    ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது - வீடியோ

    தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது.

    இதன் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் கடும் பேரழிவை சந்தித்து வருகின்றன.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    உ.பி.அரசு கேட்டத்தில் 93% ஆக்ஸிஜன் வழங்கிய மோடி அரசு.. டெல்லிக்கு கொடுத்தது 54% தான்! உ.பி.அரசு கேட்டத்தில் 93% ஆக்ஸிஜன் வழங்கிய மோடி அரசு.. டெல்லிக்கு கொடுத்தது 54% தான்!

    ரெம்டெசிவிர் தட்டுப்பாடு

    ரெம்டெசிவிர் தட்டுப்பாடு

    இந்த மருந்துதான் அதிக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுளது. இதனால் இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.

    போலீசார் அதிரடி சோதனை

    போலீசார் அதிரடி சோதனை

    இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் தகவலின் பேரில் தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனைக்கு அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது அதில் 17 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ரூ.20,000-க்கு விற்றனர்

    ரூ.20,000-க்கு விற்றனர்

    அந்த காரை ஓட்டி வந்த மருத்துவர் முகமது இம்ரான்கான் என்பவரிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது முகமது இம்ரான்கான் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் இருந்து இந்த மருந்தை ரூ.8,500-க்கு வாங்கி வந்ததாக தெரிவித்தார். மேலும் இதனை கள்ளச் சந்தையில் ரூ.20,000-க்கு விற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    3 பேர் கைது

    3 பேர் கைது

    இதனையடுத்து மருத்துவர் முகமது இம்ரான்கானை கைது செய்த போலீசார், திருவண்ணாமலைக்கு சென்று விக்னேஷையும் கைது செய்தனர். ரூ.4,700 மதிப்புள்ள மருந்தை விக்னேஷ் மருத்துவர்களிடம் ரூ.8,500-க்கு விற்று வந்ததும், மருத்துவர்கள் இதனை நோயாளிகளுக்கு ரூ.20,000-க்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    English summary
    Three people, including a doctor, have been arrested for smuggling the life-saving Remtacivir drug to corona patients for Rs 20,000
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X