மிட்நைட்டில்.. பீச்சில் "சிக்கிய" சாந்தி.. தனியா நின்ற ஆட்டோ.. மழைக்கு ஒதுங்கிய 4 பேர்.. சபாஷ் போலீஸ்
மெரினா பீச்சில் நகை பறித்த கொள்ளையர்கள் எப்படி சிக்கினார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: பீச்சில் நள்ளிரவு நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில், சென்னை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது நள்ளிரவில்?
சென்னை சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி லூப் ரோடு உள்ளது.. இந்த சாலையில் நேற்றிரவு 1.30 மணிக்கு ஒரு ஆட்டோ வந்துள்ளது.. அதில், சாந்தி என்ற நடுத்தர வயது பெண் பயணம் செய்தார்.
அவரது உறவினர் வீட்டுக்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார்.. இரவு 1.30 மணிக்கு அந்த பகுதியில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.. அதாவது ஆட்டோவை ஓட்ட முடியாத அளவுக்கு மழை பெய்ததால், டிரைவர் ஒரு ஓரமாக ஆட்டோவை நிறுத்தினார்..

சம்பாஷனை
அந்த நேரம் பார்த்து பைக்கில் 4 பேர் வந்துள்ளனர்.. ரோட்டோரம் ஆட்டோ நிற்பதையும், அதற்குள் பெண் ஒருவர் உட்கார்ந்துள்ளதையும் பார்த்த அவர்கள், பைக்கை நிறுத்திவிட்டு, வந்துவிட்டார்கள். இங்கே ஏன் வண்டியை நிறுத்தியிருக்கீங்க? என்று 4 பேரும் கேட்டார்கள்.. அதற்கு டிரைவர், "மழை அதிகமாக இருக்கு.. வண்டி ஓட்ட முடியல.. மழை கொஞ்சம் குறைந்ததுமே கிளம்பி விடுகிறோம் என்றார்.. உடனே 4 பேரும், நாங்களும் மழையில் நனைகிறோம், கொஞ்ச நேரம் ஆட்டோவில் ஒதுங்கிவிட்டு அதற்கு பிறகு செல்கிறோம் என்று சொன்னார்கள்..

நீ காலி
இதற்கு ஆட்டோ டிரைவரும், சாந்தியும் சம்மதித்தனர்.. உடனே 4 பேருமே அந்த ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டனர். அடுத்த செகண்டே, 4 பேருமே கத்தியை வெளியே எடுத்து, மிரட்ட தொடங்கினார்கள். முதலில் ஆட்டோ டிரைவரிடம் சென்று "சத்தம் போடாமல் இங்கிருந்து ஓடிடு... சத்தம் போட்டால் நீ காலி" என்றனர்.. இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் எதுவும் செய்யாமல் ஆட்டோவை அங்கேயே போட்டுவிட்டு, ஓடிவிட்டார்.. சாந்தி மட்டும் தனியாக 4 பேரிடம் மாட்டிக் கொண்டார்.. பயந்து நடுங்கிய சாந்தியிடம் நகை, பணத்தை தருமாறு 4 பேரும் கேட்டனர். ஆனால் அவர் தரமறுத்து கூச்சல் போட்டார்...

கீறல்கள்
அவர் போட்ட கூச்சல் மழை சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை என்றாலும், ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் சாந்தியின் முகத்தில் ஓங்கி கத்தியால் குத்தியது... பிறகு கழுத்து பகுதியிலும் கீறல் போட்டனர்... இதனால் நிலைகுலைந்த சாந்தி, உயிர் பயத்தில் நடுங்கினார். அவரது காதில் இருந்த கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்து கொண்டு ஓடியது.. அதற்கு பிறகுதான், சாந்தி ஆட்டோவில் இருந்து இறங்கி திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், கொள்ளையர்களை விரட்ட தொடங்கினர்..

கடலுக்குள் திருடன்
கொள்ளையர்களில் 3 பேர், தாங்கள் வந்த பைக்கில் ஏறி பறந்தனர்.. ஆனால் ஒருவர் மட்டும் அந்த பைக்கில் அவசரத்தில் ஏற முடியாமல் தவித்தார்.. பிறகு, போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே, அங்கிருந்து ஓடிச்சென்று கடலில் குதித்தார்.. போலீசாரும் விடாமல் துரத்தி சென்று, அவர்களும் கடலில் குதித்தார்கள்.. கொள்ளையனை கடலுக்குள்ளேயே மடக்கி பிடித்து, கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து கரைக்கு தூக்கி வந்தனர்... இந்த சம்பவம் நடந்த இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார்.. பிடிபட்ட கொள்ளையனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்...

பீச்சில் சாந்தி
அந்த திருடன் பெயர் சந்தோஷ் என்பது தெரியவந்தது... அயனாவரம் பகுதியை சேர்ந்தவராம்.. ஏற்கனவே இவர் மீது நிறைய கேஸ்கள் நிலுவையில் உள்ளன.. கொலை முயற்சி வழக்கும் உள்ளது.. சமீபத்தில்தான் இவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார்.. மறுபடியும் இப்போது சிக்கி உள்ளார்.. இதையடுத்து, தப்பிஓடிய 3 கொள்ளையர்கள் யார் என்ற விசாரணை ஆரம்பமானது.. தன்னுடைய கூட்டாளிகள் 3 பேர் பற்றியும் சந்தோஷ் வாக்குமூலத்தில் சொல்லிவிட்டார்.. எனவே அந்த அடையாளங்களை வைத்து போலீசார் அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்... இதற்கு நடுவில் இன்னொரு கொள்ளைக்காரன் சூர்யா என்பவர் சிக்கி உள்ளார்..

ஞாயிற்றுக்கிழமை
சந்தோஷ், சூர்யா இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் போலீசார் ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இன்னும் 2 பேரை தேடி கொண்டிருக்கிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 பேருமே தண்ணி அடித்திருக்கிறார்கள்.. ஊரெல்லாம் பைக்கில் சுற்றி வந்து ரகளை செய்திருக்கிறார்கள்.. அப்போதுதான் சாந்தோம் ரோட்டில் சாந்தி தனியாக இருப்பதை பார்த்து, அருகில் சென்று பேச்சு கொடுத்து, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் போலீசார் அதற்கு மேல் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு, தட்டி தூக்கியது பல தரப்பினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications