வெப்பச்சலனம்..இடி மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை..வானிலை மையத்தின் ஜில்லான அறிவிப்பு
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் 10 நாட்கள் உள்ளது. அனல் வெயில் பல ஊர்களில் வாட்டி வதைக்கிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் குளிர்பான கடைகளை நாடி வருகின்றனர்.

அக்னி வெயில் அனலை கக்கினாலும் ஆங்காங்கே குளிர்ச்சியூட்டும் வகையில் மழை பெய்து வருகிறது. பழனியில் கடந்த இரண்டுநாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது.
மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்றைய தினம் இடி மின்னல் சூறைக்காட்டுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications