அரசின் பஸ்ஸில் முடிந்த தீபாவளி ரிசர்வேஷன்! விரைவு பேருந்துகளில் இந்த டிக்கெட்தான் இருக்கு! முந்துங்க
சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.. இப்பண்டிகையை வரவேற்று கொண்டாட இந்தியா முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள்.. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது.. ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், பேருந்துகளிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகயிருக்கிறது.. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சொல்வதென்ன?
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

எனவேதான் பேருந்து மற்றும் ரெயில்களில் டிக்கெட்டை முன்பதிவு தொடங்கப்பட்டது.. அதிலும், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் வருடந்தோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
ரெயில்களில் டிக்கெட் விற்பனை
ரெயிலில் முன்பதிவு கடந்த ஞாயிற்று கிழமை அதாவது ஆகஸ்ட் 17ம்தேதி ஆரம்பமான நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டன..
அக்டோபர் 16, 17-ம்தேதிக்கான முன்பதிவு முடிவடைந்த நிலையில், அக்டோபர் 18, 19, 20-ம்தேதிக்காக முன்பதிவு முறையே ஆகஸ்ட் 19, 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.
பஸ், ரயில்கள் வசதி
அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதி சென்னை திரும்புவதற்காக வரும் 22-ந்தேதியும், அக்டோபர் 22, 23, 24, 25, 26-ம்தேதிகளில் சென்னை திரும்ப முறையே ஆகஸ்ட் 23, 24, 25, 26, 27-ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கடைசி நேர நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியது..
ஆம்னிகளில் கொள்ளை விலை
காரணம், பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டின் விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்ளை அடிக்க தொடங்கி விடுகின்றனர். இதன்காரணமாக அரசு பஸ்களிலும் ரெயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பேருந்துகளில் அதிக விலை கொடுத்து சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்...
எனவே, ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், டிக்கெட் கிடைக்காதவர்கள் காலம் தாழ்த்தாமல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது..
விரைவு பேருந்துகளில் முன்பதிவு
தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்னதாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கும், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்த நிலையில், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு விறுவிறுவென நடைபெற துவங்கியது..
சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப்பேருந்துகளிலும் 17, 18, 19 ஆகிய தேதிகளுக்கு பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.. பகல் நேரங்களில் புறப்படும் பேருந்துகளில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு இருக்கைகள் உள்ளன.. மீண்டும் சென்னை திரும்ப அக்டோபர் 20,21, 22 தேதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சொல்லும்போது, "அரசு பேருந்துகளில் கடந்த வருடம் 5,76,000 பேர் பயணம் செய்தனர்.. கடந்த ஆண்டைவிட அதிகமானோர் இந்த ஆண்டு பயணிக்க வாய்ப்புள்ளது.. இதற்கான முன்பதிவு 90 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இரவு நேர பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது..
இதனால் விரைவில் சிறப்பு பேருந்துகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும்.. அதில் பயணிகள் முன்பிதிவு செய்து கொள்ளலாம்.. சிறப்பு பேருந்துகளிலும் பயணிகளின் முன்பதிவு எண்டிணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால் பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications