"ஆதாமா அவர் யாரு" பாணியில்.. அரசியல்ன்னா என்னா?.. பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துவின் ஸ்டன் பதில்
சென்னை: அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு நிருபரே ஸ்டன்னாகும் அளவுக்கு ஒரு பதிலை கொடுத்துள்ளார் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து.
டிக்டாக் தொடங்கிய காலத்தில் அதில் புதிய அக்கவுண்டுகளை தொடங்கிய நிறைய பேர் தங்கள் திறமைகளை வெளியே காட்டினர். அப்படி பிரபலமானவர்கள்தான் ஜிபி முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர்!
அந்த வகையில் ஜிபி முத்து நெல்லை தமிழில் திட்டுவதால் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். செத்த பயலே! நாற பயலே என திட்டிவிடுவார். இதற்காகவே கமென்ட்டில் ரசிகர்கள் அவரை சீண்டி பார்க்கிறார்கள். மரக்கடை நடத்தி வந்த முத்து, திடீரென குடும்பத்தார் எதிர்ப்பை மீறி வீடியோக்களை டிக்டாக்கில் போட தொடங்கினார்.

75 வீடியோக்கள்
ஒரு நாளைக்கு 75 வீடியோக்களை கூட அவர் போட்டிருக்கிறார். இதன் மூலம் நிறைய சப்ஸ்கிரைபர்களை பெற்றார். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டவுடன் பேஸ்புக், யூடியூப்புகளில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவருக்கு தினந்தோறும் ஏராளமான கடிதங்கள் இவரது வீட்டுக்கு வரும். அதையெல்லாம் இவர் படிப்பது காமெடியாக இருக்கும்.

பிக்பாஸ் சீசன் 5
இவரிடம் கடந்த பிக்பாஸ் சீசன் 5 இல் பங்கேற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தன்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது என கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார். முதல் நாளே குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் வேதனை அடைந்தார். இதையடுத்து அவருடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த ஜிபி முத்து, நிகழ்ச்சியை விட்டு 14 நாட்களில் வெளியேறினார். இதற்காக இவர் சுமார் ரூ 2 முதல் 3 லட்சம் வரை ஊதியம் பெற்றதாக தெரிகிறது.

நடிகை சன்னி லியோன்
இந்த நிலையில் நடிகை சன்னி லியோனுடன் முதல்முறையாக திரைப்படத்தில் ஜிபி முத்து நடித்துள்ளார். இதன் விழாவில் சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டி விட்டு மகிழ்ந்தார். சன்னி லியோனும் ஜிபி முத்துவுடன் அன்பாக பழகினார். இதுகுறித்து டிக்டாக் புகழ் ஜிபி முத்து தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய் கூட நடிக்க ஆசையாக இருக்கிறது. வாய்ப்பு வந்தால் அவருடன் நடிப்பேன். அஜித்துடன் துணிவு படத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நான் வரும் போது சிலர் கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்து நான்தான் என கூறினார்கள்.

ரஜினிகாந்த்
அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் பெரிய காமெடியன்கள், என்னால் அவர்களை போல் எல்லாம் நடிக்க முடியாது. ரஜினிகாந்துடன் படம் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறைந்தபட்சம் அவருடன் போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நயன்தாராவுடன் நடிக்க ஆசைதான். வாய்ப்பு வந்தால் நடிப்பேன். அரசியலுக்கு வரும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. இப்படியே வந்தோமா படத்தில் நடித்தோமா, காமெடி செய்தோமா என இருக்க வேண்டும். மற்றபடி அரசியல் எல்லாம் எனக்கு செட் ஆகாது என தெரிவித்துள்ளார் ஜிபி முத்து.

பிக்பாஸ் சீசன் 6 முதல் போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 6 இல் முதல் போட்டியாளர் ஜிபி முத்து என்பதால் அந்த வீட்டில் அடுத்த போட்டியாளர் வரும் வரை அவர் மட்டுமே இருந்தார். அப்போது கமல் டிவி வழியே அவரை தொடர்பு கொண்டு பேசினார். தான் மட்டும் இருப்பதாக ஜிபி முத்து கூறியதற்கு நீங்கள் முதல் போட்டியாளர், இனிமேல்தான் மற்றவர்கள் வருவார்கள் என்றார். இதுக்கே இப்படி செய்றீங்களே ஆதாம் ஏவாள் என்ன செய்திருப்பார்கள், ஏவால் வரும் வரை ஆதாம் நிலையை சற்று நினைத்து பாருங்கள் என கமல்ஹாசன் கூற ஆதாமா அவர் யாருன்னு முத்து கேட்டது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications