Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொப்புள் கொடி உறவு.. இலங்கைக்காக எப்போதும் துடிக்கும் தமிழகம்! பல வரலாற்று தீர்மானங்களை கண்ட சட்டசபை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொருளாதார உதவி செய்ய அனுமதி கோரும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழக சட்டசபையில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றறப்பட்டுள்ளன.

Recommended Video

    இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி. சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு..

    இலங்கை தமிழருக்கு ஆதரவாக இதுவரை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்:

    நிரந்தர தீர்வு- மத்திய அரசுக்கு கோரிக்கை (24.12.2006)

    நிரந்தர தீர்வு- மத்திய அரசுக்கு கோரிக்கை (24.12.2006)

    இலங்கைத் தமிழர்களின் உயிர், உடமை, பாதுகாப்புக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சபைஆழ்ந்த வேதனை தெரிவிப்பதோடு, இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்திய அரசை இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

     தேவை அமைதிப் பேச்சுவார்த்தை( 23.04.2008)

    தேவை அமைதிப் பேச்சுவார்த்தை( 23.04.2008)

    இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்படுவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது.

     போர் நிறுத்தம் மீண்டும் தீர்மானம் (12.11.2008)

    போர் நிறுத்தம் மீண்டும் தீர்மானம் (12.11.2008)

    இந்திய அரசு தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் அமைதியும் சகவாழ்வும் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    போர் நிறுத்தம் மேற்கொள்ள இறுதி வேண்டுகோள் தீர்மானம் (23.1.2009)

     இலங்கை மீது பொருளாதாரத் தடை- போர்க்குற்றவாளிகள் (8.06.2011)

    இலங்கை மீது பொருளாதாரத் தடை- போர்க்குற்றவாளிகள் (8.06.2011)

    மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றம்

     பொதுவாக்கெடுப்பு- பொருளாதாரத் தடை (27.03.2013)

    பொதுவாக்கெடுப்பு- பொருளாதாரத் தடை (27.03.2013)

    இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்

    தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்

    இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்

    இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரியும், தனி ஈழம் தேவையா என்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடையேயும், புலம்பெயர் தமிழர்களிடையேயும் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஐ.நா மன்ற பாதுகாப்புக் கவுன்சிலை வலியுறுத்தியும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ்த் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்தோரிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்

    இலங்கை நாட்டில், நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும், வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், இந்தியப் பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தத் தீர்மானத்திற்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை, இந்தியா ஏற்றுக் கொள்கிறது,அங்கீகரிக்கிறது, என்ற நிலை தான் உருவாகும். இது மட்டுமல்லாமல், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக, இலங்கை அதிபர் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்ற தீராப் பழிச் சொல் இந்தியாவிற்கு ஏற்படும். இப்படிப்பட்ட, தீராப் பழிச்சொல் இந்திய நாட்டிற்கு ஏற்படுவதை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது.

    எனவே, தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை நாட்டில் 13.11.2013 அன்று நடைபெறவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டத்திலோ, 15.11.2013 முதல் 17.11.2013 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலோ பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+