Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அடிமைகள், அறிவற்ற அரைகுறைகளால் இந்த ஆலமரத்தை அசைக்க முடியாது” ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "காலங்கள் மாறுகிறது, எதிரிகள் மாறுகிறார்கள். ஆனால் திமுக மட்டும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் இருப்பதால் தான் கலவரத் தீயை தமிழ்நாட்டில் பற்ற வைக்க முடியவில்லை" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, புத்தகங்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா காலங்களில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும். அதற்கான வலிமை கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு இருக்கிறது.

mk stalin dmk

உழைப்பு மட்டுமல்ல உயிரை கொடுத்தவர்களாலும் உருவாக்கப்பட்டது திமுக. அந்த தியாக வரலாற்றை இளைய தலைமுறையினர் நிச்சயம் அறிய வேண்டும். திமுக என்றால் என்ன என வரலாற்றை திரும்பி பார்த்தால் போராட்டம்.. சிறை.. தியாகம் என்று தான் இருக்கும். நம் மண், மொழி, மானம் காக்க திமுக எதிர்கொண்ட வலிகள் ரொம்ப அதிகம். அத்தனையும் கடந்து 6வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க காரணம் தொண்டர்கள் தான்.

அரசியலில் பலரும் சொகுசு எதிர்பார்த்து வருவார்கள். சிறிய எஃப்.ஐ.ஆர், வழக்குகளுக்கு கூட கட்சி விட்டு கட்சி தாவுவார்கள். ஆனால் கொடூரமான அடக்குமுறை, வன்மம், அவதூறை எதிர்கொண்டு திமுகவை லட்சியமாக கொண்டு தொண்டர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வரலாற்றில் எதிர்ப்பாளர்களை எல்லாம் குப்பையில் தூக்கியெறிந்து கோட்டையை பிடித்தது திமுக.

காலங்கள் மாறுகிறது, எதிரிகள் மாறுகிறார்கள். ஆனால் திமுக மட்டும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. அரசியல் எதிரிகளை ஒற்றைக் கையால் எதிர்கொள்கிறோம். நாம் சூரியனைப் போல நிரந்தரமான ஒளியை வழங்குகிறோம். நம்முடைய அறிவுப் பாரம்பரியம் தொடரும் வரை வந்த வழி மறந்த அடிமைகள், அறிவற்ற அரைகுறைகள் என யாரும் இந்த ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் இருப்பதால் தான் கலவரத் தீயை தமிழ்நாட்டில் பற்ற வைக்க முடியவில்லை. நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் அரைமணி நேரமாவது புத்தகம் வாசிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் நீதிக் கட்சியை குழி தோண்டிப் புதைப்பேன் என ஒருவர் சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன? நூறாண்டுகள் கழித்தும் நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசு நீடிக்கிறது. பல மாநிலங்களை விட பலவற்றில் நாம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். கண்முன் தெரியும் திமுக அரசின் சாதனைகளை எதிரிகள் ஏற்க மறுக்கின்றனர். திமுக அனைவருக்குமான ஆட்சியாக செயல்படுகிறது.

மற்ற மாநிலங்களை விட நாம் 20 ஆண்டுகள் முன்னோக்கி இருக்கிறோம். கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை சிலர் மறைக்க நினைத்து திராவிடம் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாம் திராவிட மாடல் என சொல்லச் சொல்ல எதிரில் இருப்பவர்களுக்கு எரிகிறது. அதனை திரும்ப திரும்ப சொல்வோம். ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் நம்மை பார்த்தால் கசக்கிறது, எரிகிறது. நூற்றாண்டுகளுக்கு முன் நம்முடைய தமிழ்நாடு எப்படி இருந்தது, இன்றைக்கு எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்" என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+