சென்னை டூ கோட்டயம்.. சபரிமலை சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே கொடுத்த முக்கிய அப்டேட்
சென்னை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னையிலிருந்து போத்தனூர் வழியாக கேரளாவின் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. எனவே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் எளிதாக சென்றுவர தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.26, டிச.3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயத்தை அடையும் என்றும், கோட்டயத்தில் இருந்து நவ.27, டிச.4, 11, 18, 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 7 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06028) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த சிறப்பு ரயிலின் பயண நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு பதில் இரவு 8.45க்கு கோட்டயத்திலிருந்து புறப்படும். அதேபோல இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சபரிமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருக்கிறது. ஏற்கெனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் பக்தர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக பம்பை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications