திண்டிவனம் அருகே அதிமுக வேட்பாளர் மீது போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திமுகவினர் தாக்கியதாக புகார்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக பெண் வேட்பாளரை காவல்நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்ட புகாரால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டு வாக்குப் பதிவுக்காக வால்டர்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வார்டில் திமுக வேட்பாளராக பாபு, அதிமுக வேட்பாளராக சுதா போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நடைபெற்ற நேரத்தில் பாபு, சுதா இருவருமே வாக்கு சேகரித்தனர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சுதாவை திமுக வேட்பாளர் பாபு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சுதாவின் கணவர் சரவணன், அவரது மகன் அஷோக் இருவரும் திமுக வேட்பாளர் பாபுவையும் திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் சுதாவின் கணவர் சரணன், மகன் அஷோக் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்தில் தி.மு.க வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்திற்குள் சென்று சுதா குடும்பத்தினரைத் தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட அதிமுகவினரும் ரோசனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர். அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகமும் ரோசனை காவல்நிலையத்துக்கு நேரில் சென்றார். அங்கு திமுக வேட்பாளர் பாபு, அவரது தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். இந்த சம்பவங்களால் திண்டிவனத்தில் நேற்று பெரும் பதற்றம் நிலவியது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications