Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கோவில் தரிசன டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை.. இதோ ஆதாரம்.. வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் அதிக விலைக்கு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஆதாரத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில். இந்த ஆலயத்திற்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பரிகாரம் செய்யும் தலமாகவும் உள்ளதால் வருமானம் அதிகம் உள்ள கோவில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில்.

Tiruchendur temple Dharsan Fees high take this proof Vanathi Srinivasan tweet

இந்த ஆலயத்தில் இலவச தரிசனம், ரூ.20, 100 என தரிசன கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கந்த சஷ்டி விரத நாட்களில் அபிஷேகம், தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூரில் நாளைய தினம் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருக்கோவிலில் தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை இந்து சமய அறநிலையத்துறை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு விஸ்வரூபம், உதயமார்த்தாண்டம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், ஏகாந்தம், பள்ளியறை பூஜை உள்ளிட்ட 9 கால பூஜைகள் தினமும் நடக்கின்றன. இதில், காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், இரவு 7 மணி அர்த்தசாம அபிஷேகம் ஆகிய மூன்று காலங்களில் அபிஷேகம் மற்றும் தரிசனம் முக்கியமானது.

கடந்த 2018ஆம் ஆண்டு வரை அபிஷேக தரிசன கட்டணமாக ரூ.200ம், வி.ஐ.பி தரிசனக் கட்டணமாக ரூ.1,000மும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து அபிஷேக தரிசனக் கட்டணத்தை ரூ.200 லிருந்து ரூ.500 ஆகவும், வி.ஐ.பி தரிசனக் கட்டணத்தை ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆகவும் இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியது.

இதேபோல, மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளிக்கிழமை ஆகிய விஷேச நாட்களில் மட்டும் அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ. 2,000 ஆகவும், வி.ஐ.பி அபிஷேக தரிசனக் கட்டணம் ரூ.10,000 உயர்த்தினர். இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எவ்வளவோ கட்டணங்கள் வசூலித்தாலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்தது.

தற்போது கந்த சஷ்டி விழா நாட்கள் என கூறி சிறப்பு அபிஷேகக் கட்டணம் என்ற பெயரில் ரூ.3,000 வரை வசூல் செய்யப்படுகிறது. அதே போல, சாதாரண நாட்களில் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ.100 மட்டுமே வசூல் செய்யப்பட்டது. தற்போது, விழாக்காலம் எனக் கூறி சிறப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.2,000 வரை வசூல் செய்யப்படுகிறது.

ஆக மொத்தம், கந்த சஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களிலும் தரிசன கட்டணம் உயர்த்தி வசூல் செய்யப்படுவதற்குப் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரூ.100 ஆக இருந்த விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தியது தொடர்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 100/- கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி 2023ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு மட்டும் விரைவு தரிசன கட்டணச்சீட்டாக எட்டு தினங்களுக்கு மட்டும் அதாவது 12.11.2023 முதல் 19.11.2023 வரை நபர் ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தான் தனி தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்டண உயர்வு குறித்து கருத்து கூறியுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை மீது வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார் சேகர்பாபு.

Tiruchendur temple Dharsan Fees high take this proof Vanathi Srinivasan tweet

கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து கூறியிருந்தார். இந்து கோவில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்துள்ள மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

திருச்செந்தூர் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது வதந்தி என்று பலரும் கூறி வந்தனர். அதற்கு வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் எது வதந்தி.. ஆதாரம் இதோ என்று கூறி விஸ்வரூப தரிசன டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் அபிஷேக தரிசன டிக்கெட் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதையும் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+