திருப்பத்தூரே திகைக்குது.. வாணியம்பாடி ரோட்டுல யாருங்க அது? காரில் வந்த சத்தம்.. கிட்டபோய் பாத்தால்?
சென்னை: வாணியம்பாடியில் ஒரு வீட்டின் முன்பு, ப்ளூ கலர் கார் ரொம்ப நேரமாக நின்றிருக்கிறது.. அந்த காரில் அப்படியென்ன இருந்தது தெரியுமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில வருடங்களாகவே ஆடுகள் திருடு போவது அதிகரித்தபடியே வருகிறது.. இரவில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள், பொழுது விடிந்தால் மாயமாகி விடுகிறதாம்.

ஆடுகளை வளர்ப்பவர்கள் பெரும்பாலும், ஏழை விவசாயிகளாவார்கள்.. இந்த ஆடுகளை நம்பித்தான், இவர்களின் வாழ்வாதாரமும் உள்ளது.. வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை யாரோ திருடி சென்றுவிடுவதாக, தமிழகத்தின் கிராமங்களில் பல புகார்கள் பதிவாகி கொண்டேயிருக்கிறது.
நூதனம்: வீடுகளில் ஆடுகளை திருடுவோர், வீட்டிற்கு அருகில் நிறுத்தி இருக்கும் பைக் பிளக் வயர்களை துண்டித்துவிட்டு திருடிச்செல்லும் நூதனமும் நடந்து வருகிறது. வீடுகள் வாங்குவது போல் அறிமுகமில்லாதவர்கள் ஊருக்குள் வருகிறார்களாம்.. அல்லது ஆடுகளை வாங்குவதுபோல, கிடையை பார்த்து செல்கிறார்களாம்.. அடுத்த சில நாட்களிலேயே ஆடுகள் மாயமாகிவிடுவதாக, விவசாயிகள் கண்ணீர் வடித்துவருகிறார்கள்.
இந்த ஆட்டு திருட்டை தடுத்து நிறுத்த, நம்முடைய போலீசாரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியிருந்தும், இந்த ஆடு திருட்டு தொடர்கதையாகிவிடுகிறது.
வாணியம்பாடி: இதோ வாணிம்பாடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு மற்றும் ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர், ஆடுகளை வளர்த்து வருகிறார்கள்.. இந்த ஆடுகளை, மேய்ச்சலுக்கென்று பிரத்யேகமாக அழைத்து செல்வதில்லை.. மாறாக, காலை நேரத்தில் அவிழ்த்து விட்டுவிட்டால், இந்த ஆடுகள் சாலைகளில் உணவு தேடி அலைந்து சாப்பிட்டுவிட்டு, மாலையில் வீடுகளுக்கு தானாகவே வந்துவிடுவது வழக்கமாம்.
அப்படித்தான், நேற்று காலை, ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில், சில ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன.. அப்போது, ஒரு கார் வந்து நின்றுள்ளது.. அந்த காரில், இருந்தவர்கள், மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நோட்டம் போட்டுள்ளனர்.. இவர்கள் எல்லாருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாம்.. திடீரென காரில் இருந்து தங்களது குழந்தையை தூக்கி கொண்டு இறங்கியிருக்கிறார்கள்..
ஆட்டுக்கு பிஸ்கட்: பிறகு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை காட்டி, குழந்தைக்கு பிஸ்கெட் ஊட்டி விட்டுள்ளார்கள்.. கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கும் பிஸ்கட் தந்துள்ளார்கள்.. அவ்வளவுதான், அடுத்தடுத்து 4 ஆடுகளை தூக்கி காரில் தூக்கி போட்டுள்ளனர்.. அப்போது அந்த ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது.. பிறகு, உடனடியாக காரை எடுத்து கொண்டு, அந்த குடும்பத்தினர் கிளம்பி விட்டனர்.

இதனிடையே, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய வீட்டுக்கு எதிரில் ரொம்ப நேரமாக கார் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.. அதனால், சந்தேகத்தின்பேரில் தன்னுடைய செல்போனில், அதை வீடியோவும் எடுத்தார்.. அதற்கு பிறகுதான், அந்த கும்பல், காரில் இருந்து இறங்கி, ஆட்டுக்கு பிஸ்கட்டை ஊட்டிவிட்டு, கையோடு அள்ளி சென்றுள்ளது.. இவையெல்லாமே வீடியோவில் பதிவாகியும் உள்ளது..
அதிர்ச்சி: இந்த வீடியோ, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட, அதுதான் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோ, வாணியம்பாடி போலீசாரின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications