Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கொடுமை".. சிகிச்சைக்குக் கூட பணம் எடுக்க முடியல.. உழவர் உயிரை பறித்த வங்கி.. கொதித்த ராமதாஸ்

வங்கி கணக்கை முடக்கியதால் பணமின்றி நோயாளி விவசாயி உயிரிழந்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை உழவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது" என்று பொதுத்துறை வங்கியின் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்.. 53 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி.. தென்னை, வெங்காயம், சோளம் உள்ளிட்டவற்றை சுமார் இரண்டரை ஏக்கரில் பயிட்டு, விவசாயம் செய்து வந்தார்...

மனைவி பெயர் கவிதா.. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அவர்கள் ஸ்கூலில் படித்து வருகிறார்கள். கனகராஜ்-க்கு சில காலமாகவே உடம்பு சரியில்லை..

சிகிச்சை

சிகிச்சை

அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டவர்.. இவருடைய அப்பா ரெங்கசாமி, விவசாய தேவைக்காக, கேத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.75 ஆயிரம் விவசாயக் கடன் பெற்றிருந்தார்... அதற்கு கனகராஜ்தான் சாட்சி கையெழுத்து போட்டிருந்தார்.

 ரெங்கசாமி

ரெங்கசாமி

ஆனால், ரெங்கசாமி கடந்த 2017ல் இறந்துவிட்டார்.. எனவே, அப்பா வாங்கிய கடனை, தான் திரும்ப செலுத்திவிடுவதாக சம்பந்தப்பட்ட வங்கியில் கனகராஜ் தெரிவித்திருந்தார்.. ஆனால், இந்த மாத ஆரம்பத்தில் கனகராஜ்-க்கு சிறுநீரக சிகிச்சை தொடர்பாக பணம் வேண்டி இருந்தது.. அதனால், அதே வங்கியில் உள்ள தனது அக்கவுண்ட்டிலிருந்து பணம் எடுப்பதற்காக சென்றார்..

முடக்கம்

முடக்கம்

ஆனால், அவரால் அவரது பணத்தை எடுக்க முடியவில்லை.. அவரது கணக்கும் முடக்கப்பட்டிருந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த கனகராஜால், கடைசிவரை தன்னுடைய பணத்தை எடுக்கவே முடியவில்லை.. இந்நிலையில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்..

கனகராஜ்

கனகராஜ்

தான் பாடுபட்ட சேர்த்த பணத்தை, ஒரு அவசரத்துக்குகூட எடுக்க முடியாத நிலையில், வங்கி கணக்கு முடக்கப்பட்டதை நினைத்து கனகராஜ் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.. கனகராஜ் ஆஸ்பத்திரியில் உள்ள நிலைமையை எடுத்து சொல்லியும், வங்கியில் அக்கவுண்ட் ரிலீஸ் செய்யவில்லையாம். வங்கி தரப்பின் இந்த மனிதநேயமற்ற செயலை பலரும் கண்டித்துள்ளனர்..

ட்வீட்கள்

ட்வீட்கள்

அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் ஒன்றுக்கு 3 ட்வீட்களை பதிவிட்டு போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.. அந்த ட்வீட்களில், "திருப்பூர் மாவட்டம் குள்ளம்பாளையத்தில், தந்தை பெற்ற பயிர்க்கடனுக்காக, வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியதால் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் என்ற ஏழை உழவர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது!

உழவர்கள்

உழவர்கள்

கனகராஜின் மருத்துவச் செலவுகளுக்காக அவரது வங்கிக் கணக்கிலிருந்த 75000 ரூபாயை எடுக்க அனுமதி கோரியும், அதை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்தது மனிதநேயமற்ற செயலாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.. உழவர்களின் நீண்டநாள் கோரிக்கைப்படி பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உழவர் கனகராஜின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!" என்று நோயாளி உழவரின் உயிரை பறித்த அந்த வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+