50 ஆயிரம் கடனுக்கு தினசரி 600.. திருத்தணியில் விடுதியில் அடைக்கப்பட்ட மனைவி.. கலங்கிய கணவன்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த தம்பதி 50 ஆயிரம் ரூபாய் கடன்வாங்கி உள்ளார்கள். அதற்கு தினசரி 600 கட்டி வந்தார்களாம். குடும்ப சூழல் காரணமாக 10 நாள் பணத்தை கட்டவில்லையாம். இதற்காக அரக்கோணம் அழைத்து வந்த நிதிநிறுவன உரிமையாளர் அவர்களை கைக்குழந்தையுடன் விடுதியில் அடைத்தது வைத்து என்ன செய்தார்கள் தெரியுமா? இந்த விவகாரத்தில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏழை மக்கள் பலர் சரியான கடன் உதவிபெற வழி தெரியாமல் அல்லது தெரிந்தே அதிக கடன் வாங்கி அவஸ்தைக்கு உள்ளாகி வருகிறார்கள். கந்து வட்டிக்கு கடன் வாங்கி, வட்டியும் அசலும் கட்ட முடியாமல் டார்ச்சருக்கு உள்ளாகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த தம்பதிக்கு நடந்துள்ளது.

திருத்தணி சாய்பாபா நகரை சேர்ந்த 30 வயதாகும் பிரித்திவிராஜ் என்பவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்திவரும் 55 வயதாகும் பாஸ்கர் என்பவரிடம் கடந்த மாதம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளாராம். இந்த கடன் தொகையை அடைக்க நாள்தோறும் ரூ.600 விகிதம் கட்டி வந்ததாக தெரிகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 10 நாட்களாக பணத்தை கட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ்வாணன் (35), தீபக் என்கின்ற அப்பு (34) ஆகிய இருவரும் பிரித்திவிராஜ் வீட்டிற்கு சென்று பணத்தைக் கேட்டார்களாம். பணத்தை விரைவில் கட்டுவதாக பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள் பிரித்திவிராஜ், அவரது மனைவி சுவாதி மற்றும் 11 மாத கைக்குழந்தையை அரக்கோணத்தில் உள்ள ஒரு விடுதியில் பூட்டி வைத்து கணவன்- மனைவி இருவரையும் சரமாரியாக அடித்தார்களாம். பிரித்திவிராஜ் மற்றும் அவரது மனைவி கதறுவதை ஊழியர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்களாம். பின்னர் இரவு 8 மணிக்கு பிரிதிவிராஜை பணத்தை செலுத்தி விட்டு மனைவி மற்றும் குழந்தை அழைத்துச் செல்லுமாறு ஊழியர்கள் அனுப்பினார்களாம்.
பலத்த காயமடைந்த பிரித்திவிராஜ் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷுபம் திமான்யிடம் மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் அரக்கோணம் விரைந்து சென்று விடுதி அறையில் பூட்டி வைத்திருந்த பிரித்திவிராஜியின் மனைவி மற்றும் கைக்குழந்தையை மீட்டனர்.
பின்னர் பிரித்திவிராஜ் குடும்பத்தை விடுதி அறையில் பூட்டி வைத்து தாக்கிய நிதி நிறுவன ஊழியர்கள் தமிழ்வாணன், அப்பு, உரிமையாளர் பாஸ்கர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வாங்கிய கடனுக்காக தம்பதியை கைக்குழந்தையுடன் விடுதியில் பூட்டி வைத்து தாக்கிய சம்பவம் திருத்தணி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications