திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணி வைக்காது, தனித்துதான் நிற்கும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு போகும்போது கூட யாரும் இல்லாமல் தனித்துதான் போவார், என்பதைதான் 'தனித்து' நிற்கிறோம் என்பதற்கு அர்த்தமா? என்று திருத்தணி தவெக வேட்பாளரை பார்த்து, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
திருத்தணி தவெக வேட்பாளர், வழக்கறிஞர் சத்திய குமார் தனியாக பிரச்சாரம் செய்திருப்பது சோஷியல் மீடியாக்களில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக வேட்பாளர்கள்
வழக்கறிஞர் சத்திய குமார்தான், திருத்தணி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக தவெகவில் இரண்டு வகையாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்று விஜய் தொண்டர் இயக்கத்திலிருந்து வந்த நிர்வாகிகள், தலைமையிடம் பேசி சீட் வாங்கியிருக்கிறார்கள். நீண்ட நாள் ரசிகர் மன்றத்தில் உழைத்ததால் ரொம்ப ரேராக சீட் கிடைத்திருக்கும். மற்றொரு ரகம், மாற்றுக்கட்சியிலிருந்து வந்த நிர்வாகிகள். இவர்கள் இருவரிடம் ஆட்கள் மற்றும் பண பலம் இருக்கும்.
திருத்தணியில் நடந்தது என்ன?
இது இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் நிர்வாகிகளை பிடித்து, அங்கு இங்கு பேசி சீட் வாங்கியிருப்பவர்கள் மூன்றாவது ரகம். இவர்களிடம் பணம்/ஆட்கள் பலம் போதிய அளவில் இருக்காது. எனவே, பிரச்சாரம் டல் அடிக்கும். அப்படித்தான் திருத்தணியில் நடந்திருக்கிறது. சத்திய குமார் தனியாக சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். தணித்து நிற்போம் என்று விஜய் சொன்னதற்கு அர்த்தம் இதுதானா? என்று ரோட்டில் போவோர் வருவோர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
காரணம் என்ன?
என்னதான் நடக்குது திருத்தணியில்? ஏன் வேட்பாளர் தனித்துவிடப்பட்டிருக்கிறார் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது "வேட்பாளர் எனில், பிரச்சாரத்திற்கு போகும்போது பிரச்சார வாகனத்தை எடுத்து வர வேண்டும். ஆனால், நம்மாளு அதெல்லாம் எடுத்துவர மாட்டாராம். சரிங்க எப்படிங்க போகுறது என கேட்டால்.. சைக்கிள் எடுத்துவர சொல்கிறார். எத்தனை பேருங்க சைக்கிளில் வர முடியும்? என்று கேட்டால்.. அதிகமா ஆள் வேணாம்.. 13 பேரு இருந்தா போதும்னு சொல்றாரு.
https://tamil.oneindia.com/news/chennai/dad-didnt-speak-to-me-can-bjp-tamilisai-soundararajan-win-chennai-mylapore-remember-kalaignar-k-786831.html
அதிருப்தியில் நிர்வாகிகள்
இங்கு கட்சி கிளை அளவில் பலமாக இருக்கிறது. இதெல்லாம் யாருக்காக செய்திருக்கிறோம்? தேர்தல் வெற்றிக்காகத்தானே! ஆனால், இருந்தும் என்னுடன் யாரும் பிரச்சாரத்திற்கு வர வேண்டாம். நான் வீடியோ போட்டே வாக்குகளை வாங்கிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது எங்களையே அவர் அவதூறாக பேசுகிறார். நாங்கள் கஞ்சா அடித்திருப்பதாக கூறுகிறார். இதெயெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?
எங்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே நாங்கள் அவருக்கு 100% வேலை செய்ய மாட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications