மாநாடு திரைப்படம் பார்க்கப் போன திருவள்ளூர் கலெக்டர், போலீஸ் எஸ்.பி! வெடித்த சர்ச்சை.. ஏன் தெரியுமா?
சென்னை: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குழந்தைகளுடன் இணைந்து சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
Recommended Video
உலக எய்ட்ஸ் தினம், டிசம்பர் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திட்டமிட்டார்.

மாநாடு படம்
எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் மற்றும் பொது மக்களிடையே, சமநிலையை, நிலை நிறுத்தும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் இனைந்து திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

பாராட்டுகள்
அதற்கு முன்னதாக எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு டாக்குமெண்டரி திரைப்படத்தை சிறுவர் சிறுமிகளுக்கு திரையில் காண்பிக்கப்பட்டது.
இதுபோன்ற நல்லெண்ண நடவடிக்கைகளுக்காக கலெக்டர் மற்றும் எஸ்.பி. பல தரப்பட்டவர்களால் பாராட்டப்பட தவறவில்லை.

விமர்சனங்கள்
இந்த படங்கள் தற்போது வெளியாகி சுற்றி வருகின்றன. அதேநேரம், எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளின் படங்களை வெளியிடுவது குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாதிப்புகள்
இது போன்ற விஷயங்களில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் போது வருங்காலங்களில் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஊடகங்களில் இந்த குழந்தைகளின் முகம் தெரியாத அளவிற்கு ப்ளர் செய்து வெளியிட்ட போதிலும், சமூக வலைத்தளங்களில் அப்படியே அந்தப்படம் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications