Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூர் கடலில் மீனவரிடம் மாட்டிய மர்ம பொருட்கள்! கிட்ட போன பழவேற்காடு ஈஸ்வரனுக்கு ஒன்னுமே புரியல

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்கன்குப்பத்தை சேர்ந்த மீனவர் ஈஸ்வரனுக்கு கடலில் ஆச்சரியம் காத்திருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோதுதான், இந்த சம்பவம் ஈஸ்வரனுக்கு நடந்துள்ளது.. இந்த செய்திதான் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இணையத்திலும் இந்த தகவல் வைரலாகி கொண்டிருக்கிறது.

பொதுவாக கடலுக்கு மீனவர்கள் சென்றாலே, விதவிதமான மீன்களை அள்ளி வருவார்கள்.. ஆனால் சில சமயம் வித்தியாசமான பொருட்கள், அவர்களின் வலையில் சிக்கிவிடுகின்றன.

Tiruvallur Fisherman mysterious things

சிதம்பரத்தில் முதலை குட்டி

நேற்று முன்தினம்கூட கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, கே.ஆடுர் கிராமத்தில் சில மீனவர்கள் வழக்கம்போல் குளத்தில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளனர்.. அப்போது சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட முதலைக்குட்டி வலையில் சிக்கியிருக்கிறது.

முதலில் இதை பெரிய வகை மீன் என்றுதான் மீனவர்கள் நினைத்துள்ளனர்.. பிறகு உற்றுப் பார்த்தபோதுதான் அது முதலைக்குட்டி என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்..

உடனே வலையுடன் சேர்த்து கவனமாக கரைக்கு கொண்டு வந்து, வனத்துறைக்கும் தகவல் தந்தனர்.. வனத்துறையினரும், முதலைக்குட்டியை மீட்டு பாதுகாப்பாக வக்கிரமாரி ஏரியில் கொண்டுபோய் விட்டனர். ஆனால், முதலைக்குட்டி குளத்தில் இருந்ததால், கண்டிப்பாக பெரிய முதலையும் அதே குளத்தில் இருக்கும் என்ற கிலி மக்களுக்கு வந்துள்ளது.. எனவே பெரிய முதலையை பிடிக்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

திருவள்ளூர் ஈஸ்வரன் மீனவர் வலை

இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திலும் மீனவர்கள், கடலில் வலையை விரித்துள்ளார்கள்.. அப்போது வலையில் மர்ம பொருட்கள் சிக்கி பரபரப்பை தந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு அரங்கன்குப்பத்தை சேர்ந்த மீனவர் ஈஸ்வரன்.. இவர் நேற்றைய தினம் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்..

இவர்கள் அனைவரும் கடலில் மீன் பிடிக்க வலையை வீசியிருக்கிறார்கள்.. சில நேரம் கழித்து வலையை இழுத்தபோது, அதில் ஏதோ ஒன்று "வெயிட்டாக" சிக்கியிருக்கிறது.. உடனே ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கு முகத்தில் ஒரே பூரிப்பு. எப்படியும் பெரிய மீன்கள் சிக்கி இருக்கும் என்று நினைத்து, படகை கரைக்கு கொண்டு வந்து, வலைக்குள் பார்த்திருக்கிறார்கள்.

அப்போதுதான், மீன்கள் இல்லாமல், வேறு ஏதோ பல மர்ம பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. அதில் பேட்டரி லைட்டுகள், பிற உதிரிப் பாகங்கள் இருந்துள்ளன.. இதெல்லாம் என்ன ரகமான கருவிகள் என்று தெரியாமல், உடனடியாக பொன்னேரி மீன்வளத்துறைக்கும், திருப்பாலைவனம் போலீசாருக்கும் தகவல் தந்துள்ளனர்.

மின்னணு சாதனங்கள்

விரைந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் அந்த மர்ம பொருட்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒப்படைத்தனர்... மேலும் இந்த கருவிகள் என்னென்ன? எதற்காக பயன்படுத்தப்படுபவை என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆனால் வலையில் சிக்கிய பொருட்கள் எல்லாமே மின்னணு சார்ந்த சாதனங்களாகும்.. பெரிய கப்பல்களில் ரேடியோ தொடர்பு மற்றும் தரவு அளவை அளவிடுவதற்கான கருவிகளாக இவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கரை ஒதுங்கும் சாதனங்கள்

திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதுமே புயல், மழை வெளுத்து வாங்கியது.. இதனால் கடந்த சில நாட்களாகவே பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு போகவில்லை.. சில மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்றிருந்த நிலையில்தான், இப்படியான மர்ம பொருட்கள் சிக்கியிருக்கின்றன.

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, பழவேற்காடு முகத்துவாரம் கரையில் நிலஅதிர்வை கண்டறியும் மிதவை கருவி ஒன்று , கரையொதுங்கி இருந்ததாம்.. இப்போது மீண்டும் மின்னணு பொருட்களை போன்று சிக்கி உள்ளன..

மர்ம பொருட்கள்

கடலோர பகுதியில் இப்படியான மர்ம பொருட்கள் கிடைத்து வருவது, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளன.. எனவே, இதுகுறித்து உடனடியாக இந்திய கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர்களும் இது சம்பந்தமான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்..

மர்ம பொருட்கள் கடலில் எதற்காக இருக்கின்றன என்பது குறித்து அதிகாரிகள் விரைவில் மக்களிடமே தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+