சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருபக்கம் உதயநிதி.. இன்னொரு பக்கம் செந்தில்பாலாஜி.. இது சரியா?.. வம்பிழுக்கும் தமிழக பாஜக..!

கோவையில் திமுக கூட்டம் நடக்க உள்ளதை காயத்ரி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

ஆனால் உதயநிதி பிறந்தநாளை கொண்டாட்டத்திற்கு மற்றும் கோவையில் திமுக கூட்டம் 1 லட்சம் பேர்... திமுக பிரமாண்டக் கூட்டம் நடைபெற உள்ளது... திமுக, இந்து கோவில்களை கோவிட் மையமாக காட்டுகிறார்களா? இது சரியா? கடவுள் அவர்களின் அட்டூழியங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்" என்று பாஜகவின் காயத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் 27-ம் தேதி 44-வது பிறந்தநாள் வருகிறது.
இதையொட்டி அவரது பிறந்தநாளை திருவிழாவை போல் கொண்டாடி தீர்க்க தமிழகமெங்கும் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திர கிரகணம் 2021: சூரியன் சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்ற ராகு கேது - புராண கதை சந்திர கிரகணம் 2021: சூரியன் சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்ற ராகு கேது - புராண கதை

 கீதா ஜீவன்

கீதா ஜீவன்

முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா எப்படி நடைபெறுமோ அதே போல் இந்த வருடமும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மழை வெள்ளபாதிப்புகளுக்கு மத்தியில் நிவாரண பணிகளை முடுக்கிவிடாமல் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனை தேவையா? என்று அமைச்சர் கீதா ஜீவனுக்கு பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா ஏற்கனவே கேள்வி எழுப்பிருந்தார்..

எனவே, தேவையற்ற சர்ச்சையில் சிக்க விரும்பாத உதயநிதி, தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை.

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இதனிடையே, 22-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கோவை வருகிறார்... இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாட்டை செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.. வெட்டிவா என்றால் கட்டி வந்து நிற்கும் அளவுக்கு செயல்திறன் மிக்கவர் செந்தில் பாலாஜி என்று ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை அவரை புகழ்ந்துள்ளார்.. இந்த முறை முதல்வரை வரவேற்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் செந்தில்பாலாஜி..

முதல்வர்

முதல்வர்

"கோவை குலுங்கியது என்கிற அளவுக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு அவரை வரவேற்க வேண்டும்.. நம் தலைவர்தான் முதல்வர்... நம்மைக் கண்டுதான் எதிரிகள் பயப்பட வேண்டும்... ஓர் அடி எடுத்து வைத்தால், இரண்டு அடி எடுத்துவைக்க வேண்டும்" என்று செந்தில்பாலாஜி கோவை நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதைதான் பாஜகவின் காயத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.. நாளைய தினம் கிரிவலம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் இந்த கொண்டாட்டம் மட்டும் தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி

உதயநிதி

"திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை தடை செய்கிறீர்கள்.,. ஆனால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மற்றும் கோவையில் திமுக கூட்டம் 1 லட்சம் பேர்... கடவுளுக்கு இன்னொரு திட்டம் இருக்கிறது. கிரிவலம் வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் கோவையில் திமுக பிரமாண்டக் கூட்டம் நடைபெற உள்ளது... திமுக, இந்து கோவில்களை கோவிட் மையமாக காட்டுகிறார்களா? இது சரியா? கடவுள் அவர்களின் அட்டூழியங்களையும் அநீதிகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆளுங்கட்சியால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Tiruvannamalai Deepam Festival and BJP Gayathri questions DMK Gov about
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X