நாளை மறுநாள் வரை டைம்.. திமுக எடுக்கும் முக்கிய முடிவு.. டிகேஎஸ் இளங்கோவன் சஸ்பென்ஸ்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுக்கு ஆதரித்துள்ளது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது. அதிமுக சார்பில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு திமுகவிடம் மறைமுக ஆதரவு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நாளை மறுநாள் முக்கியமான முடிவு எடுக்கும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் கூறிவிட்டார். மேலும் பெரும்பான்மையுடன் எந்த கட்சி வந்தாலும் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் திமுக - அதிமுக கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

திமுக முக்கிய முடிவு
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் திட்டம் குறித்து எந்த முடிவும் செய்யவில்லை. திமுக நாளை மறுநாள் வரை காத்திருக்கும். விஜய் ஆட்சியமைக்க முடியாவிட்டால் திமுக முடிவை மறுபரிசீலனை செய்யும். விஜய்யின் தவெக ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் வருகிற 10 ஆம் தேதி வரை நேரம் கொடுத்துள்ளார். அதுவரை காத்திருப்போம். 10 ஆம்தேதிக்கு பிறகு நாங்கள் முடிவு செய்வோம்.
எல்லாவற்றையும் பொறுத்து தான் கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம். தற்போது தவெக ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் உள்ளது. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே அடுத்தகட்டம் குறித்து முடிவு செய்ய முடியும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போதே அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications