உலகெங்கும் அமைதி தவழட்டும்! வளம் பெருகட்டும்! ஜவாஹிருல்லா தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து!
சென்னை: உலகெங்கும் அமைதி , வளம் பெருகட்டும் என தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா.
பற்றி எரியும் மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாசிச சூழ்ச்சிக்குப் பலியாகி நிம்மதி இழந்து நிற்கும் அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும் பிரார்த்தனை செய்வோம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து வருமாறு;

''தியாகத் திருநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கொடுங்கோலன் நம்ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத்தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.
மேலும்,இறைத்தூதர் இஸ்மாயீல் தம் இளமைக் காலத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மனவுறுதியுடன் சந்தித்து சாதனை படைக்க உறுதுணையாக நின்றவர் அவரது அருமை அன்னை ஹாஜரா. கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் அடக்குமுறைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்வதற்கு இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது, அன்னாரது குடும்பத்தினரின் தியாக வாழ்வியல் செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் தான் ஹஜ் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. தியாகத்திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் கடந்த இரு மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூர் மக்களிடையே ஒற்றுமை நிலவவும், பாசிச சூழ்ச்சிக்குப் பலியாகி நிம்மதி இழந்து நிற்கும் அம்மக்களின் வாழ்வில் வசந்தம் வீசவும், இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.''
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications