ஜஸ்ட் மிஸ்.. 500க்கு 499 மார்க்.. 4 பாடங்களில் முழு மதிப்பெண்கள்.. கெத்து காட்டிய 3 மாணவிகள்!
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, அரியலூர் மாணவி சோஃபியா, உடுமலைப்பேட்டை மாணவி திவ்யா லட்சுமி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தி இருக்கின்றனர். இவர்கள் மூவருமே 4 பாடங்களில்100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர். அதேபோல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவர் மனிஷ் குமார் 498 மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள். அதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 93.80 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 95.88 சதவிகிதமும், மாணர்கள் 91.74 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனிடையே மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 34வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில் 3 மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, அரியலூர் மாணவி சோஃபியா, உடுமலைப்பேட்டை மாணவி திவ்யா லட்சுமி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தி இருக்கின்றனர். இவர்கள் மூவருமே 4 பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.
ஒரேயொரு மார்க் எடுத்திருந்தால் 500க்கும் 500 மதிப்பெண்கள் பெற்று பிரம்மாண்ட சாதனை படைத்திருக்க முடியும். அதேபோல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவரான மனிஷ் குமார் 500க்கும் 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள நிலையில், தமிழில் மட்டும் 2 மதிப்பெண்கள் மிஸ்ஸாகி 98 மதிப்பெண்கள் சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு அளவில் மொழிப்பாடத்தில் 32 மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் ஆங்கிலத்தில் 346 மாணவர்களும், கணிதத்தில் 1,996 மாணவர்களும் முழுமையான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications