10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் எப்போது?
சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 10ம் வகுப்பு மாணவர்களில் 93.80 சதவிகிதமும், 11ம் வகுப்பில் 92.09 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு எப்போதும் நடக்கும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 92.09 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 97.45 சதவிகித தேர்ச்சியுடன் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 11ஆம் வகுப்பை பொறுத்தவரை அரியலூர் மாவட்டம் 97.76 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல் ஈரோடு மாவட்டம் 96.97 சதவிகித தேர்ச்சியுடன் 2வது இடத்திலும், விருதுநகர் 96.23 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 6.20 சதவிகித மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 8.81 சதவிகித மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் அவர்களுக்கான துணைத் தேர்வு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வுக்கு மே 22ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பள்ளிகளை அணுகி மாணவர்கள் எளிதாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கற்றல் கற்பித்தல் இரண்டுக்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications