10ம் வகுப்பில் 100க்கு 100.. கணிதத்தில் குறைந்த சென்டம்.. சமூக அறிவியலில் அசத்திய மாணவர்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை பார்க்கலாம். அதில் கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிக தேர்ச்சியை பெற்றுள்ளனர். மாணவிகள் 95.48 சதவிகிதமும், மாணவர்கள் 91.74 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,17,261 மாணவர்களில் மாணவிகள் 4,18,183 மாணவிகளும், 4,00,078 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் இம்முறை சிவகங்கை மாவட்டத்தில் 98.31 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 2வது இடத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 97.54 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்பின் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.76 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 96.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 4வது இடத்திலும், திருச்சி மாவட்டத்தில் 96/61 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி மொழிப்பாடத்தில் 32 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். ஆங்கிலத்தில் 346 மாணவர்களும், கணிதப் பாடத்தில் 1,996 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்களும் முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கணிதத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவது குறைந்திருப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications