பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சி விகிதத்தில் கடைசி 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட கடைசி 5 மாவட்டங்கள் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5-ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்துன் 688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3 லட்சத்து 60 ஆயிராத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள் ஆவர்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியானது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். எழுதும் போது கொடுத்த செல்போன் எண்ணிற்கும் மேசேஜ் மூலமாக ரிசல்ட் தெரிவிக்கப்பட்டது.
அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட கடைசி 5 மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
1. ராணிப்பேட்டை: 82.58 சதவிகிதம்.
2. மயிலாடுதுறை: 83.70 சதவிகிதம்
3. திருவண்ணாமலை: 84.00 சதவிகிதம்
4. விழுப்புரம்; 84.51 சதவிகிதம்.
5. காரைக்கால்: 81.18 (புதுவை) சதவிகிதம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications