பிளஸ் 1,+ 2 பொதுத்தேர்வு..மாணவர்கள், ஆசிரியர்கள் இந்த தவறுகளை மறந்தும் செய்து விடாதீர்கள்..வார்னிங்
தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமையன்று பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
செய்முறை தேர்வுகள் முடிந்து பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம்:
பிளஸ் 2 தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகள் 8,51,303 பேர். பிளஸ் 1 தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவிகள் 7,88,064 பேர். பிளஸ் 2 தேர்வுக்கான பள்ளி தேர்வு மையங்கள் 3,225. பிளஸ் 1 தேர்வுக்கான பள்ளி தேர்வு மையங்கள் 3,224. பிளஸ் 2 தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்கள் 46,870. பிளஸ் 1 தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்கள் 43,200. இரண்டு தேர்வுகளுக்கும் 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் சிறை கைதிகள்
கைதிகள் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்களுககு தேர்வு மையங்களில் தரைத்தளத்தில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
தேவையான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் மற்றும் முகப்புத்தாள்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களுக்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்
தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட மின்சார வாரியத் தலைவருக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளை, செம்மையாக நடத்திட ஒத்துழைப்பு நல்கக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

செல்போன் கொண்டு வர தடை
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடுங்குற்றம்
தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது கடுங்குற்றமாக கருதப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக உள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்திட பரிந்துரை செய்யப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம். மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

ஆள்மாறட்டம் செய்தால் தண்டனை
குறிப்பாக ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன் வசம் வைத்திருந்து பார்த்து எழுதினால் அல்லது எழுத முயற்சித்தது கண்டறியப்பட்டால் அவரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். மேலும், குற்றத்தின் தன்மை அடிப்படையில் அடுத்த 2 பருவங்களுக்கும் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்டம் செய்தால், அந்த பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தரதடை விதிக்கப்படும். விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், தேர்வரின் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவங்கள்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வர்கள் நேரத்தை காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகள் எப்போது
செய்முறை தேர்வுகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17ஆம் தேதியும் +1 மாணவர்களுக்கு மே 19ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்கள் பதற்றமின்றி பொதுத்தேர்வு எழுத தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications