தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் 117 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 5890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 119 பேர் மரணம் என்ற நிலை இன்று சற்று குறைந்து 117 ஆக உள்ளது.
அதேபோல் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கையு கணிசமாக அதிகரித்தே வருகிறது. இன்று மட்டும் 5,,556 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,514 ஆகவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆகவும் இருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தமே 53,716 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த சில நாட்களாக 1000-க்கும் கீழாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இன்று மீண்டும் 1,000க்கும் அதிகமாகி உள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 1187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் 437 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 315 பேருக்கும் திருவள்ளூரில் 495 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. கோவை மற்றும் திருவள்ளூரில் தலா 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications