மேகதாது அணை: மத்திய அரசு அனுமதிக்க கூடாது- டெல்லி செல்லும் குழு-அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்சி கூட்ட முடிவை டெல்லி சென்று கூட்டாக மத்திய அரசிடம் தெரிவிப்பது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அனைத்து கட்சி கூட்டம்
மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

13 அரசியல் கட்சி தலைவர்கள்
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு வந்த அனைத்து கட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
Recommended Video

அனுமதிக்க கூடாது என தீர்மானம்
இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது; மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவை டெல்லி சென்று மத்திய அரசிடம் கூட்டாக வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்டவற்றில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications